சிறுதானிய உற்பத்தி அதிகரிக்க திட்டம்
மதுரை: மத்திய அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் பயறு, சிறுதானியம், பருத்தி, எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக திட்ட ஆலோசகர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு சிறுதானிய பரப்பு 32 ஆயிரம் எக்டேர், பருத்தி 5000 எக்டேர், உளுந்து, பாசிப்பயறு, துவரை 7000 எக்டேர், நிலக்கடலை, எள் எண்ணெய் வித்துகள் 5000 எக்டேரில் உற்பத்தியாகிறது. இவற்றின் சாகுபடி பரப்பு, மகசூல் இலக்கை இரு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விதைகள், உயிர்உரம், நுண்ணுாட்ட சத்துகளை 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!