ADVERTISEMENT
மேலுார்: மதுரையில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. இதில் மேலுார் ஜாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12 தங்கம், தலா 3 வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சந்தோஷ், ஆகாஷ், புகழ், கிருத்திக் பிரித்திஷ், நித்திஷ், சூர்யா, பிளசன், கவி, கிருத்திகா, கோபிகா, பெருமாள் ஆகியோர் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். தர்ஷன் பரத், மனோஜ், வயிரவன் வெள்ளி பதக்கம், தயாநிதி, ரகுராம், செழியன் வெண்கல பதக்கம் வென்றனர். அவர்களுக்கு தாளாளர் ஜெயந்த் வேதசாம், பயிற்சியாளர் சுரேஷ்குமார் பரிசு வழங்கினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!