கண்விழித்திரை பரிசோதனை
மதுரை: மதுரை அரவிந்த கண்மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. முதன்மை கண் மருத்துவர் கிம் துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடந்த கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இறுதி நாள் நிகழ்ச்சியில் குறைமாத குழந்தைகள் கண்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கண்விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது. மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதன், அலுவலர்கள் கோமதி, லட்சுமிகாந்தி, கிருஷ்ணவேணி, உதயாலட்சுமி ஏற்பாடுளை செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!