ADVERTISEMENT
கடலுார், : விக்கிரவாண்டி அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென, பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அகத்தீஸ்வரர் கோவிலில் பராமரிப்பின்றி கிடப்பதாக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் நாச்சியப்பன், செயலாளர் வினோத் ராகவேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அகத்தீஸ்வரர் கோவிலை சென்று பார்வையிட்டனர்.
பின், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை சந்தித்து, 'பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் பராமரிப்பின்றி கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!