Load Image
Advertisement

கருணை கொலை செய்யக்கோரி கைக்குழந்தையுடன் பெண் மனு

 Woman with infant pleads for mercy killing    கருணை கொலை செய்யக்கோரி கைக்குழந்தையுடன் பெண் மனு
ADVERTISEMENT


விழுப்புரம் : 'கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதால், கருணைக் கொலை செய்ய வேண்டும்' என கை குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் மனைவி அஸ்வினி, 23; இவர், நேற்று தனது கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

கடந்த 2018ம் ஆண்டு எனக்கும் பண்ருட்டியை சேர்ந்த பாலாஜிக்கும் திருமணம் நடந்தது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தேன்.

அதன்பிறகு பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் தேவநாதன், என்பவருடன், கடந்த 2021ம் ஆண்டு, மயிலம் முருகன் கோவிலில், திருமணம் நடந்தது.

புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். பெண் குழந்தை உள்ளது.

தேவநாதன் வேலைக்குச் செல்லாமல், அவர் குறிப்பிடும் மொபைல் எண்ணில், வெளி நபர்களிடம் ஆசை வார்த்தை பேசுமாறும், அதன் மூலம் பணம் கேட்டு வாங்கும்படி எனக்கு தொல்லை கொடுத்தார்.

இல்லையென்றால் தாம்பத்ய உறவை வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் பரப்புவேன் என மிரட்டினார். சிலரிடம் அதே போல் பேச வைத்து கூகுள் பே மூலம் பணம் பறித்தார்.

தொடர்ந்து இதற்கு நான் உடன்படாததால், என்னையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்தினார். இது குறித்து, நான் விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் அளித்தேன்.

பெரியதச்சூருக்குச் சென்று, தேவநாதன் வீட்டில் நடந்ததைக் கூறினேன். அவரது பெற்றோரும் என்னை திட்டி விரட்டி விட்டனர்.

வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, எனது கணவரும், மாமனாரும், கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எங்களை கருணை கொலை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement