பைக் தீ வைத்து எரிப்பு போதை ஆசாமி கைது
பண்ருட்டி : பண்ருட்டி அருகே போதையில் பைக்கை தீ வைத்து எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம், பி.ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வினோத்குமார். கடந்த 19 ம் தேதி மாலை 6:00 மணிக்கு வீட்டின் முன்பு யமஹா மோட்டார் பைக்கை நிறுத்தியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்,41; என்பவர், குடிபோதையில் வினோத்குமாரை திட்டி, பைக் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், பைக் எரிந்து சேதமானது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!