விருப்பம் உள்ள துறையில் சாதித்து காட்ட வேண்டும்
மதுரை: திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் தேசிய இளைஞர் பெருவிழா முதல்வர் அப்துல் காதிர் தலைமையில் நடந்தது. தாளாளர் எம்.எஸ். ஷா துவக்கி வைத்தார்.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்து பேசுகையில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கற்பனை திறனை வளர்த்துக்கொண்டு விருப்பமான துறையை தேர்வு செய்து அதில் சாதித்துக்காட்ட வேண்டும் என்றார்.
மாநில என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செந்தில்குமார், பல்கலை திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, பேராசிரியர்கள் ராஜ்குமார், கார்த்திகா, முனியாண்டி, ராமுத்தாய், ஜோதி, உடற்கல்வி இயக்குநர் நாராயண பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 25 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். பேராசிரியை பூங்கோதை நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!