ADVERTISEMENT
நெல்லிக்குப்பம். : நெல்லிக்குப்பத்தில் போடப்பட்ட ஒரு மாதத்திலேயே சாலை உள்வாங்கியது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சரவணபுரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு புதியதாக தார்சாலை போடப்பட்டது. சாலை போடும் போதே பணி தரமாக நடக்கவில்லை என மக்கள் புகார் கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று அந்த சாலை வழியாக சென்றபோது, சாலை உள்வாங்கி, லாரி ஒன்று சிக்கியது. லாரியை அப்புறப்படுத்தி, பள்ளத்தில் கிராவல் கொட்டி மூடினர்.
அதேபோல் 9 வது வார்டு பங்களா தெருவில் சிமண்ட் சாலை போடப்பட்டு ஒரு மாதத்துக்குள் ஜல்லி பெயர்ந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால் இதுபோன்ற தவறுகள் நடப்பதுடன், மக்கள் பிரதிநிதிகளும் கண்டும் காணால் உள்ளதுதான் வேதனை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!