காகிதப்பை, பாக்குமட்டை தட்டு தயாரிப்பு பயிற்சி
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் காகிதப்பை, பாக்குமட்டை தயாரிப்பு குறித்த கட்டண பயிற்சி நவ., 27 முதல் டிச., 1 வரை காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடத்தப்படுகிறது.
18 வயது முடிந்த, குறைந்தது பத்தாம் வகுப்பு படித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத காகிதப்பை, காகித தட்டு, பாக்கு மட்டை தட்டு, மந்தாரை இலை தட்டு, தொன்னை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
போட்டோ, கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி., எஸ்.டி.யாக இருந்தால் ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகலுடன் நேரில் முன் பதிவு செய்யலாம். 86956 46417.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!