பூமி பூஜை
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி செங்குளத்தில் விருதுநகர் எம்.பி., நிதியின் கீழ் புதிய கிராமச் சாவடி கட்டடத்திற்கான பூமி பூஜையை எம்.பி., மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்.
அப்போது நகர்ப்புற மக்களுக்கும் 100 நாள் வேலை பணியை பெற்றுத்தர வேண்டும் என பெண்கள் கூறினர்.
இதுகுறித்து பார்லிமென்ட்டில் பேசுவதாக எம்.பி., உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யா, காங்., தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!