நெல்லிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை விர்
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் வாரச்சந்தையில் காய்கறி விலை உயர்ந்திருந்தது.
நெல்லிக்குப்ம் அருகே காராமணிக்குப்பத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. நேற்று அதிகளவு கருவாடு விற்பனைக்கு வந்திருந்தது. அதேபோல், காய்கறிகள் விற்பனைக்காக 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் போட்டிருந்தனர்.
கருவாடு விற்பனை அமோகமாக நடந்த நிலையில், காய்கறி விலை அதிகமாக இருந்ததால், எதிர்பார்த்த அளவிற்கு காய்கறி விற்பனையாகவில்லை. ஒரு கிலோ தக்காளி ரூ. 40, வெங்காயம், 60, கேரட், 50, பீன்ஸ்,100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலை மீண்டும் உயர துவங்கியிருப்பதால் இல்லதரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!