'லோக்சபா தேர்தலில், 15 தொகுதிகளை தி.மு.க., கூட்டணியில் வாங்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைமை நடத்தும்
விழாக்கள், கூட்டங்களுக்கு கோஷ்டி தலைவர்கள் வருவதில்லை. ஆனால் சோனியா, ராகுல், பிரியங்கா சென்னைக்கு வந்த போது மட்டும் ஆஜராகி, கட்சியில் உழைப்பது போல நடிக்கின்றனர்.
அரசு பதவி அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதிக்கின்றனர்; ஆனால், கட்சிக்காக செலவு செய்வதில்லை. எந்த பதவியும், அதிகாரமும் இல்லாதவர்கள், கடன் வாங்கி தங்கள் சொந்த பணத்தை கட்சிக்கு செலவு செய்கின்றனர்.
கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களை அடையாளம் கண்டு, தேர்தலில், 'சீட்' கொடுக்க வேண்டும். வாரிசுகளுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு
வழங்கக் கூடாது. புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில், இம்முறை, 15 தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும். எந்த பதவியும் வகிக்காத மாவட்ட தலைவர்களுக்கு, லோக்சபா தேர்தலில்
போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.
கட்சியில் உழைக்கிற மாவட்ட தலைவர்களை பாராட்டி, மாநில தலைவர் ஊக்கப்படுத்த வேண்டும். மறைந்த மாவட்ட தலைவர்களின் குடும்பங்களுக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் நிதி பெற்று வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
ராமதாசுக்கு கண்டனம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள்:
* அடுத்த மாதம் இறுதிக்குள், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, அவர்களுக்கான பயிற்சி கூட்டங்களை, ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்
* கவர்னர் ரவியின் காழ்ப்புணர்ச்சி அரசியலை முறியடிக்கிற வகையில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும்
* அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தவுடன், இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நேர்ந்த போது, அதற்காக முதல் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றிய, மறைந்த நேருவை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பழித்துபேசியதை கண்டிக்கிறோம்* பா.ஜ., ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு, கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய
வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - நமது நிருபர் -
வாசகர் கருத்து (20)
15 சீட் கொடுத்தால் காங்கிரஸ் கட்சியில் நிற்பதற்கு 15 பேர் இருக்கிறார்களா? காங்கிரஸ் தமிழ்நாட்டில் எப்போதோ அழிந்துவிட்டது.
தடையேதுமில்லை. கனவில் 39 சீட்களிலும் காங்கிரஸ் நிற்கலாம்.
என்னாது வெறும் 15 சீட்டா ஏன் 38 சீட் காங்கிரசுக்கு வெறும் ஒரே ஒரு சீட் திமுகவிற்கு என்று சொல்லியிருக்கலாமே 2024 பாராளுமன்ற தேர்தலில்
ஆகஆக அதான் அங்கே நெருக்கடி கொடுத்தா செருப்படி தான் விழும் என்பதை அழகிரி நன்கு அறிவார்.
இந்த தடவை இத்துப்போன காங்கிரசுக்கு ஏழு சீட்தான்.