Load Image
Advertisement

இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்

Israel Hamas War, Houthi Rebels, Galaxy Leader: Hijacking cargo ship to India  இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்
ADVERTISEMENT
டெல் அவிவ் : இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு பணியாளர்களுடன் இந்தியா வந்த சரக்கு கப்பல், ஏமனில் ஹவுதி அமைப்பினரால் நேற்று கடத்தப்பட்டது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்த மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது.

இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு, ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படை ஆதரவு தெரிவித்து வருகிறது.

போர் நீடிக்கும் சூழலில், 'இஸ்ரேலின் கப்பல்கள் அல்லது அவர்களது கொடி பறக்க கூடிய கப்பல் செங்கடல் பகுதியில் சென்றால், அவற்றை கடத்துவோம்' என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த 'கேலக்சி லீடர்' என்ற சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று கடத்தினர்.

இதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது. அது இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.

இந்த கப்பல் ஆபிரகாம் உங்கர் என்னும் இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமானது என்றும், அதில் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கப்பல் கடத்தப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


வாசகர் கருத்து (6)

 • Kalyanaraman - Chennai,இந்தியா

  கப்பல் கடத்தல் சம்பவம் நடந்தது ஏமனில், இதற்கு இந்தியா என்ன செய்ய முடியும். சரக்கு கப்பல்களை கடத்தும் கூட்டம் காலங்காலமாக இருக்கிறது. பாதுகாப்பிற்காக இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற சர்வதேச நாடுகளின் கடற்படைகள் கடலில் பாதுகாப்புக்காக இருக்கிறது. அதையும் மீறி நடக்கிறது.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  இந்த முட்டாள் மூர்க்க கும்பல் , ஒட்டுமொத்த உலக மூர்க்க சமூகத்தை அழிக்காமல் ஓயாது போல .....இப்படி முட்டாள்தனமாக ஏதாவது செய்துகொண்டிருந்தால் , இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்க இயலாது ..பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் எதுவும் துணைக்கு வராது ....இந்த போலி முஸ்லீம் கும்பலின் அழிவை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் போல ...துவக்கத்தில் இருந்தது போல இஸ்ரேலுக்கு எதிராக எந்த கூச்சலையும் தற்போது காணோம் ..ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய அகதிகளால் பட்ட பாட்டில் புத்திவந்து , காசா மீதான தாக்குதலை கண்டுகொள்ளவும் இல்லை ....முஸ்லிம்கள் போராட்டத்தை சட்டை செய்யக்கூட இல்லை ....நோஸ்ட்ரோடாமஸ் சொன்னது போல மூர்க்க மதம் அழியக்கூடிய நேரம் அருகில் வந்துவிட்டது போலும் ..சுபஸ்ய சீக்கிரம் ....

 • Karthik - Dindigul,இந்தியா

  கப்பலில் பொருளைக் கடத்துறது பழைய முறை. கப்பலேயே கடத்துறது புது முறை. பாதுகாப்பு நடைமுறைகளும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

 • jayvee - chennai,இந்தியா

  அந்த கப்பலை பற்றி அதன் வருகையை பற்றி கப்பல் சம்பத்தப்பட்ட ஊழியர்களோ அல்லது அது புறப்பட்ட துறைமுக ஊழியர் எவரோ தகவல் கொடுத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.. பச்சோந்திகளை அடையாளம் காணவேண்டிய நேரம் இது ..

 • பைரவர் சம்பத் குமார் -

  1). முட்டாள்களுக்கு அறிவே கிடையாது.2). ஏற்கனவே இஸ்ரேலிடம் போரை நிறுத்த சொன்னால் அவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்த பிணைய கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் பற்றி பேச முடியும் என்று பிடிவதமாக உள்ளது.3). இந்த நிலையில் வேலியில் போற ஓணானை வீட்டிற்கு உள்ளே கொண்டுவந்த கதையாக ஹவுதி வேலை செய்து உள்ளது.4). எந்த காரணத்தை கொண்டும் இஸ்ரேல் அடிய பணிய கூடாது.5). மாறாக தீவராவத இயக்கங்கள் ஆன ஹமாஸ், ஹவுதி இஸ்பெல்லா மீது அடி பொலிய வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்