Load Image
Advertisement

மாணவியரை அழ வைக்கும் நிகழ்ச்சிகள் வேண்டாம்!

No programs that make students cry!     மாணவியரை அழ வைக்கும் நிகழ்ச்சிகள் வேண்டாம்!
ADVERTISEMENT
சென்னை: மாணவ - மாணவியரை அழ வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக, நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தும்படி, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் சார்பில் பல்வேறு இடங்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதில், நடிகர்கள் மற்றும் சில தொழில்முறை அல்லாத உளவியலாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், ஒரு வகையான இசையை ஒலித்து, மாணவ - மாணவியரின் கண்களை மூடச்சொல்லி, அவர்களை, 'மெஸ்மரிசம்' போன்ற நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

அப்போது, பெரும்பாலும் மாணவியர், மன ரீதியாக தளர்ந்து கதறி அழுது விடுகின்றனர். இதனால், சிலர் நம்பிக்கை இழந்து துவளும் நிலை உள்ளதாக, பெற்றோர் தரப்பில் பள்ளிகளில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அதன்படி, மாணவ - மாணவியருக்கு ஆலோசனை மற்றும் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தும் முன், நிகழ்ச்சியின் தன்மை, பங்கேற்கும் விருந்தினர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

மாணவ - மாணவியரின் கல்வியை, எதிர்காலத்தை, தன்னம்பிக்கையை, மன ரீதியான துணிச்சலை வளர்க்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

அதற்குரிய ஆளுமைகளை மட்டுமே பங்கேற்க வைக்க வேண்டும். இதற்காக விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து (9)

  • Raa - Chennai,இந்தியா

    சுவிஸ ஆவி நீக்கும் கூட்டம் போல உள்ளதே? மெஸிமரிஸ் பண்ணி அழவைக்கிறார்களா? எங்கயோ இடிக்குதே?

  • விடியல் - ,

    அழவைக்கும் நிகழ்ச்சி எல்லாம் வேண்டாம்.காலம் முழுவதும் அழவைக்கும் அரசும் குடிகார பெற்றோரும் சகோதரர்கள் உள்ளபோது ஏன் இந்த நிகழ்ச்சி.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    ஆமாம். மாணவர்களுக்கு போதையின் தீமைகளை பற்றி பேசாதீர்கள் இது டாஸ்மாக் நாடு. அப்புறம் இன்னொன்னு... மாணவியர்கள் அழ போகிறார்கள் என்று எப்படி முன்னாடியே தெரியும். முட்டாள் அரசு படு முட்டாள் அதிகாரிகள்☺️☺️☺️☺️

  • lrbalaji - madurai,இந்தியா

    இன்னும் நிறைய பேருக்கு புரியல நம்முடைய உடலில் உள்ள அழுகை என்று சொல்லக்கூடிய நிகழ்வு நம் இதயம் உருகி நம்முடைய ஈக்கோ கரைந்து அன்பு என்கின்ற ஒன்று வெளிபட கூடிய ஒன்று அது நடந்துவிட்டால் உள்ளே இருக்கின்ற மன அழுத்தம் குறையும். அது சாதாரமாக நிகழக்கூடிய நிகழ்வு அல்ல. அதற்கப்புறம் நீங்கள் சொல்லக்கூடிய மோட்டிவேஷன் என்கின்ற விசயத்தை புகுத்தலாம்.

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    ஒரு குறிப்பிட்ட நடிகரை கட்டம் கட்டி அவரை இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்கிற நிலைப்பாட்டை உருவாக்குவது ஏன் ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement