Load Image
Advertisement

கோயில் நிர்வாக அதிகாரி கிறிஸ்தவரா? வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல் இயேசு படம்

Is the temple administrator a Christian? Jesus picture in 'whatsapp status'  கோயில் நிர்வாக அதிகாரி கிறிஸ்தவரா? வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல் இயேசு படம்
ADVERTISEMENT


சேலம் : சேலம் சின்ன கடை வீதி சின்ன மாரியம்மன் குமாரசாமிப்பட்டி எல்லை பிடாரியம்மன் அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமர் ஆகிய கோவில்களின் செயல் அலுவலராக சங்கர் என்பவர் உள்ளார். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரியான அவரின் மொபைல் போனில் உள்ள 'வாட்ஸாப்' ஸ்டேட்டஸ் பகுதியில் சமீபத்தில் இயேசு படம் இருந்தது.

இதை பார்த்து சக அலுவலர்கள் அதிகாரிகள் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மதம் மாறி விட்டாரா என சிலர் சந்தேகத்தை கிளப்பினர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில் 'ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிவோர் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது விதி. கோவிலில் பணியாற்றும் இவர் இது போல ஸ்டேட்டஸ் படம் வைப்பதால் கோவிலில் எவ்வாறு செயல்படுவார் என்ற கேள்வி எழுகிறது' என்றனர்.

இந்து முன்னணியின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் கூறியதாவது:

'கிரிப்டோ கிறிஸ்துவர்கள்' என சொல்லப்படும் ஹிந்து மதத்தில் இருந்து மதம் மாறி வெளியே சென்றவர்கள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களை அழிக்க முயற்சிக்கின்றனர்.

இது நீண்ட காலமாக நடக்கிறது. சான்றிதழ் மட்டும் 'ஹிந்து' என வைத்துக் கொண்டு ஹிந்துகளுக்கு கிடைக்க வேண்டிய வேலையை தட்டிப் பறிக்கின்றனர்.

அந்த வகையில் தான் இந்த அதிகாரியும் வாட்ஸாப் ஸ்டேட்டசில் பிற மத கடவுள் படத்தை வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் செயல் அலுவலர் சங்கரோ ''மதம் மாறவில்லை; வாட்ஸாப் ஸ்டேட்டசில் இயேசு படம் வைக்கவில்லை. அப்படி இருந்தால் அதுகுறித்து எனக்கு தெரியாது. நான் ஹிந்து தான்'' என்றார்.


வாசகர் கருத்து (32)

  • ramani - dharmaapuri,இந்தியா

    நீ உத்தமனாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். பண்ணுவானா

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    திருடத்தான் துறைக்குள் வருகிறார்கள்

  • பேசும் தமிழன் -

    இப்படிப்பட்டவர்கள் எப்படி.... கோவிலுக்கு நல்லது செய்வார்கள் ???

  • Siva - tirunelveli,இந்தியா

    . அதனால் அரசு வேளை இனி கிறிஸ்துவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்

  • AMSA - chennai,இந்தியா

    முதல்வரே கிறிஸ்தவர் என்று அவர் மகனே கூறியுள்ளாரே ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்