Load Image
Advertisement

வந்தார், வென்றார் மோடி!

 Modi came and won!  வந்தார், வென்றார் மோடி!
ADVERTISEMENT
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆன போது, இந்திய வங்கிகளும் திவாலாகி விடும் என்று, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கூறின. ஆனால், நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் லாபம், இந்த நிதியாண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை, நாங்கள் உயர்த்தி வருகிறோம் என, பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் கடன் கொடுத்து, இந்திய வங்கிகளை மோடி அரசு திவால் நிலைக்கு தள்ளி விட்டதாக, அரைகுறை அறிவுள்ள காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சொல்கின்றன.

கடந்த, 2014-ல் மோசமான நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகளின் நிலை, 2023-ல் எப்படி மாறியுள்ளது என்பதை ஒப்பிட்டு பார்த்தாலே, அவர்கள் சொல்லும் பொய்யுரைகள் வெட்ட வெளிச்சமாகும்.மோடி அரசு மீது காங்கிரஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எப்படி தவிடு பொடியாகின்றன என்பதை, வங்கிகளின் ஒன்பது ஆண்டுகால செயல்பாடுகளை வைத்து பார்ப்போம்.

2014-க்கு முன்கடந்த, 2013- - 14-ல் பொதுத்துறை வங்கிகளின் லாபம், 27 சதவீகிதம் சரிந்து இருந்தது. 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்த பின், என்.பி.ஏ., எனப்படும் வாராக்கடன்களின் உண்மையான அளவை அறிய, விசாரணை துவங்கியது.

இதன் வாயிலாக, சொத்து தர மதிப்பாய்வு - ஏ.க்யூ.ஆர்., என்ற புள்ளி கணக்கிடப்பட்டது. வங்கிகளை பொறுத்தவரை, 3-5 சதவீதத்துக்கும் அதிகமான வாரா கடன்கள் இருப்பது, மிக மோசமான நிலையை குறிக்கும்.

அப்போது கனரா வங்கிக்கு 12 சதவீதம், மஹாராஷ்டிரா வங்கிக்கு 19 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 18 சதவீதம், ஐ.டி.பி.ஐ., மற்றும் ஐ.ஓ.பி., வங்கிகளுக்கு முறையே, 24 - 28 சதவீதம் வாரா கடன்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்டேட் வங்கிக்கு 11 சதவீத வாராக் கடன் இருந்தது.

ஒட்டுமொத்தமாக, அனைத்து வங்கிகளின் வாராக்கடன் அளவு, 35 சதவீதமாக, அதாவது, 15 சதவீதம் அதிகமாக இருந்தது.

மோடியின் அஸ்திரங்கள்முதலில் வங்கிகளின் அனைத்து விபரங்களும் திரட்டப்பட்டு, பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மோசமான நிலையில் இருந்த வங்கிகளை மீட்டெடுக்க, புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டன.

* முதற்கட்டமாக, பொதுத்துறை வங்கிகளில் புதிய பணம் போடப்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு முதலீடு செய்தது. இது வங்கிகளின் நிலையை உயர்த்தியது.

பெரும்பாலான பணம், அரசு பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்யப்பட்டது. இந்த செயல்முறையை, 2022 வரை மத்திய அரசு தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், 2023-ல் பொதுத் துறை வங்கிகள், முழு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளன.

* இரண்டாவது முன்னெடுப்பாக, மிக மோசமான நிலையில் இருந்த சிறிய வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதன் வாயிலாக, வங்கிகளின் செயல்திறன் மேம்பட்டது.

இதிலும் சில ஆபத்துகள் இருந்தன. மோசமான நிலையில் இருந்த சிறு வங்கிகளின் தாக்கம், பெரிய வங்கிகளை பாதிக்காத வகையில், வங்கி இணைப்பு மேற்கொள்ளப்பட்டது.

* மூன்றாவதாக, வாராக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, கடுமையாக்கப்பட்டது. இனி யாரும், பழைய கடனை அடைக்காமல் புதிய கடன் வாங்க முடியாது. வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர்களுக்கு, புதிய தொழில் துவங்க, கடன் கொடுக்கப்படவில்லை; பங்குச் சந்தைகளில் இருந்து பணம் திரட்டக் கூட, அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் 2014-ல் இருந்து இதுவரை, 10 லட்சம் கோடிக்கு மேலான வாராக் கடன்கள் மீட்கப்பட்டுள்ளன.

* நான்காவதாக, 21 பொதுத்துறை வங்கிகளில், நெருக்கடியை எதிர்கொண்ட 11 வங்கிகளை, சிறப்பு உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் வைக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

அவற்றின் வாராக்கடன் விபரம் உட்பட அனைத்தும், துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அவற்றை மீட்க, ரிசர்வ் வங்கி சில அறிவுரைகளை வழங்கியது; அவை பழைய நிலைக்கு திரும்பின. இப்போது பல மடங்கு லாபம் ஈட்டும் நிலையை அடைந்துவிட்டன.

2014-க்கு பின்வங்கி கட்டமைப்பில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் வாயிலாக, வங்கிகள் மெல்ல மெல்ல, லாபத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. பொதுத்துறை வங்கிகளின் லாபம், கடந்த நிதியாண்டில் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.

முந்தைய, 2021- 2022 நிதியாண்டில் இந்த, 12 பொதுத் துறை வங்கிகளின் லாபம், 66,540 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, 2023-ல் வங்கிகளின் லாபம், 57 சதவீதம் அதிகரித்துள்ளது.

வங்கிகளின் மொத்த லாபம், 1,04,649 கோடியானது. ஒட்டு மொத்த லாபத்தில், ஸ்டேட் வங்கியின் பங்களிப்பு மட்டும் 50,232 கோடி ரூபாய்.

கடந்த, 2017- - 18- நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள், 85,390 கோடி ரூபாய் அளவுக்கு, நிகர இழப்பை சந்தித்திருந்தன. 2019-ல் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், வங்கிக் கட்டமைப்பில், பல துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டன.

மூன்றே ஆண்டுகளில் வங்கிகள், 1 லட்சம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளன.

மோடி அரசின் சாதுர்யம்அமெரிக்காவை போல இந்திய வங்கிகளுக்கு எந்த ஒரு சூழலிலும், இதுவரை திவால் நிலை வந்தது இல்லை. எந்த ஒரு வங்கி நிதி சூழலில் சிக்கித் தடுமாறினாலும், அரசு அதை கை துாக்கி விடுகிறது.

அத்துடன், பெரிய பொதுத்துறை வங்கிகள், சிறிய வங்கிகளில் முதலீடு செய்து, அவற்றை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அரசால் கேட்கப்படுகிறது.

மக்கள் நம்பிக்கையை வங்கிகள் இழக்காமல் வைத்திருப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் செயல்பாடு முக்கிய காரணம். உலக நாடுகளின் மத்திய வங்கிகளுள், சிறப்பாக செயல்படும் அமைப்புகளில் ஒன்றாக, ரிசர்வ் வங்கி கருதப்படுகிறது.

மாற்று பணமாகும் ரூபாய்இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக, சில அரைகுறை பொருளாதார விமர்சகர்கள் செல்கின்றனர்.

உண்மையில் மற்ற நாடுகளின் கரன்சிகளை ஒப்பிடும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு, அதல பாதாளத்தில் செல்லாமல் தடுக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

ஐரோப்பாவின் யூரோ, அமெரிக்காவின் டாலருக்கு நிகராக எவ்வளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பார்த்தால் புரியும். உலகம் நாடுகள் தங்கள் வர்த்தகத்தை, அமெரிக்க டாலரில்தான் நடத்த வேண்டி இருக்கிறது.

அதை முறியடித்து இந்தியா மெல்ல, ரூபாயை புகுத்தி வருகிறது. பல நாடுகளுடன், டாலரில் அல்லாமல் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் திட்டத்தை, இந்தியா முன்னெடுத்துள்ளது.

சிங்கப்பூர், மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, ஈரான், சவுதி உட்பட, 18 நாடுகள் இந்திய ரூபாயை, பரிவர்த்தனை மதிப்பாக ஏற்றுக் கொள்ள துவங்கியுள்ளன. இதனால் டாலரின் ஆதிக்கம் குறையும்.

இந்திய ரூபாயின் மதிப்பு வளர்ச்சி அடையும். வலுவான வங்கித் துறையை நோக்கி பயணிக்கிறோம்.

இதை சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி செல்ல கடமை பட்டிருக்கிறோம்.

முனைவர்

எஸ்.ஜி.சூர்யா

மாநில செயலாளர், தமிழக பா.ஜ.,வாசகர் கருத்து (7)

 • rameshkumar natarajan - kochi,இந்தியா

  Profit is not the only motto of a welfate government. Profit is the objective of business. After this government came to power how and all benefits are abolished bank charges are collected we all know. Minumum balance charges, etc, etc How senior citizens benefits are denied in trains we know. First, can these people say one scheme which is flagship of this 9.5 years of rule? instaed of saying their achievements, bjp is targetting congress, which is not in power for one decade. irony

 • Ruban Samuel - Maldives,மாலத்தீவு

  Kadan varakkadan agamal yirkka innum loan koduththal varakadane yirukkathu...

 • Dharmavaan - Chennai,இந்தியா

  இதை ஏன் பொது மக்களுக்கு தெரு மீட்டிங் மூலம் தெரியபொப்படுத்த வேண்டும்

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் லாபம், இந்த நிதியாண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.... ஆனால், இதை எல்லாம் மறைத்து எதிர்க்கட்சியினர், ஏதாவது ஒரு கடுகளவு குறை இருந்தால், அதை பெரிதுபடுத்தி மக்களை ஏமாற்றுவார்கள்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இவர் சொல்லுவது அனைத்தும் சரியே. ஆனால் விவாதங்களில் இவரை பேச விடுவதில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்