Load Image
Advertisement

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் பொன்னேரியில் கனரக வாகனங்கள் அத்துமீறல்

 Heavy vehicles trespassed in Ponneri by officials who did not enforce the order    உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் பொன்னேரியில் கனரக வாகனங்கள் அத்துமீறல்
ADVERTISEMENT
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில், துறைமுகங்கள், எரிவாயு முனையங்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.இந்நிறுவனங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் தச்சூர் - பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன.

கனரக வாகனங்களால் பொன்னேரி நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, கடந்தாண்டு நவம்பர் மாதம், கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் பொன்னேரி நகர பகுதிக்குள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.இதை சில நாட்கள் போலீசார் கண்காணித்து வந்தனர். பின், மீண்டும் இச்சாலையில் வழக்கம்போல பயணித்து வந்தன.

இந்நிலையில், கடந்த செப்., 29ம் தேதி, பொன்னேரி சப் - கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அதில், நெடுஞ்சாலை, காவல், சாலை போக்குவரத்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதியும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், தச்சூர் - -பொன்னேரி -- மீஞ்சூர் சாலையில், காலை 6:00 முதல், இரவு 9:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

பொன்னேரி நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க, பஞ்செட்டி இணைப்பு சாலை, கவரைப்பேட்டை காவல் நிலையம் அருகில் தடுப்புகள் அமைத்து, காவல் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த தடை இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில், பொன்னேரி நகரப்பகுதிகளில் கனரக வாகனங்கள் தொடர்ந்து பயணித்து கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, திருவொற்றியூர் சாலை, தாயுமான் சாலை, பழைய பேருந்து நிலையம், செங்குன்றம் சாலைகளில் கனரக வாகனங்களால், மற்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த தடை உத்தரவை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement