Load Image
Advertisement

தேவையற்ற காட்சிகள், பேச்சுகள் நம்மையறியாமல் நம்மை குடைந்து விடுகின்றன!

 Unnecessary scenes and speeches drown us without realizing it!    தேவையற்ற காட்சிகள், பேச்சுகள்  நம்மையறியாமல் நம்மை குடைந்து விடுகின்றன!
ADVERTISEMENT
அறிவியல் தொழில்நுட்பம் சமுதாயத்தில் எத்தனையோ உபயோககரமான மாற்றங்களைக் கொண்டு வந்து வாழ்வை வளமாக்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றாலும், அதே தொழில் நுட்பம் தீயநோக்கம் கொண்டவர்கள் மற்றும் சமூக விரோதிகளிடமும் சென்று சேர்வதால், தீய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவுக்கு வரும் ஏராளமான வழக்குகளே இதற்கு உதாரணம்.

இதை, 'கோப்ரா எபக்ட்ஸ்' ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். பத்தொன்பதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் புதுடில்லியில் நாகப்பாம்பின் தொல்லை அதிகரித்து உயிர்ச்சேதம் ஆகிக் கொண்டிருந்ததாம்.
Latest Tamil News

அப்போது ஆங்கில அரசு பாம்பின் எண்ணிக்கையைக் குறைக்க, இறந்து போன பாம்பிற்கு விலை நிர்ணயம் செய்து அறிவித்தனர். அந்த தொகைக்கு ஆசைப்பட்டு வீட்டிலேயே ரகசியமாக நல்ல பாம்பை வளர்த்து சாகடித்து, அரசிடம் கொடுத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர் சிலர்.

புதிய கலாசாரம்விளைவு விபரீதமானதை அறிந்த அரசு, அறிவிப்பை திரும்பப் பெற்றது. வளர்த்தவர்கள் எல்லாம் பாம்பை வெளியே திறந்து விட்டனர்; திரும்பவும் பாம்புத்தொல்லை அதிகமானதாம்.

கடந்த காலங்களில் திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடிப்பழக்கம் உடையவராக சித்தரிக்கப்படுவார். எம்.ஜி.ஆர்., ஒரு திரைப்படத்தில் குடிகாரனாக நடித்துக் கூட தனக்கு பழக்கமில்லை என்று சொல்லுவார்.

ஆனால் இன்றைய கதாநாயக பாத்திரங்கள், நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்துவது போல், மது அருந்துகின்றனர்.

பருவ வயதில் தோன்றும் இனக்கவர்ச்சிக்கு, படைப்பாளிகள், காதல் என்று பெயர் சூட்டி தங்களின் கற்பனை பாத்திரங்களை கண்டபடி எல்லாம் உலவ விட்டதன் விளைவு, அது பள்ளி மாணவர்களையும் பதம் பார்க்கத் துவங்கி விட்டது.

இந்த புதிய கலாசாரம் நிச்சயமாக காட்சி ஊடகங்களின் தாக்கம் தான். சமூக ஊடகங்களில் நல்லதும் கெட்டதுமான தகவல்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறது. ஆர்வம் காரணமாக பலர், குறிப்பாக இளைஞர்கள், அவற்றில் முற்றிலுமாக மூழ்கி அடிமையாகி இருக்கின்றனர்.

தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பும், தகவல்களும் அளவுக்கு அதிகமாக வந்து குவியும் போது, அதன்மீது நாம் செலுத்தும் கவனம் சிதறி, முடிவெடுப்பது பாதிக்கப்படும். பின்னால் அந்த முடிவால் வெற்றி கிடைக்காத போது, நாம் எடுத்த முடிவின் மீது நமக்கே திருப்தியின்றி, நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலைமை ஏற்படும்.

இயல்புநல்ல நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் தன்னுடன் சில தவறான தீய விளைவுகளையும் கொண்டு வருவது இயல்பு. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைக் காக்க வேண்டிய கடமை, அரசுக்கும் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களுக்கும் இருக்கிறது.

உயிரினங்களையும், உருவம் தாங்கிய பொருட்களையும் தாங்கிப் பிடித்து கொண்டு இருக்கிற பூமியின் புவி ஈர்ப்பு விசை தான், அவை கீழே விழுந்து, பாதிப்பு அடையவும் காரணமாகிறது. பாரபட்சம், புவியீர்ப்பு விசையில் இல்லை; அதை பயன்படுத்தும் உயிரினங்களிடம் உள்ளது.

சமூக ஊடகத்தில் கால்பதித்து காசு பார்க்க நினைப்பதில் தவறில்லை; அதற்காக மக்களின் ஆர்வத்தை துாண்டும் நோக்கத்தோடு, ஆபாசமாகவும் அருவருப்பாகவும் ஏமாற்றும் வகைகள் காட்சிப் படுத்தப்படும்போது பார்ப்பவர்களின் மனதை நேர்மறை சிந்தனையிலிருந்து பிறழ வைத்து விடுகிறது.

தவறான தகவல்மிகைப்படுத்தாமல் காட்சிகளை சுவைப்படுத்த முடியாது என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை, அளவுக்கு அதீத ரசனைக்காக மிகைப்படுத்தப்படும் காட்சிகள், மக்களிடம் தவறான தகவல்களை கொண்டு சேர்க்கும் என்பதும்.

தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகும் நேரத்துக்கு தக்கபடி, தங்களின் அன்றாட அவசிய வேலைகளின் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் அளவுக்கு, மக்கள் அவற்றுக்கு அடிமையாகி விட்டனர் என்பது ஒரு கசப்பான உண்மை.

காட்சிகளை ஈடுபாட்டுடன் கவனிக்கும் போது, நமக்கு உடன்பாடில்லாத வெறுப்பூட்டும் நிகழ்வுகளைக் காண நேரிடும் போது தோன்றும் உணர்வுகள், நமக்குத் தேவை இல்லை என்றாலும், நினைவில் தங்கி, மனதை பாதிக்கிறது; மனதில் நிகழும் பாதிப்பு, உடலில் பிரதிபலிக்கிறது.

சாதாரணமாக ஒரு நபருக்கு, இருக்க வேண்டிய புரிதல் மற்றும் சகிப்புத்தன்மை அளவு குறைந்து, எடுத்ததற்கெல்லாம் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்; முடிவெடுக்கின்றனர்.

அதனால் தான், பல தற்கொலை நிகழ்வுகளில், காரணத்தைக் கண்டுபிடிக்க, நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கே இயலாமல் போகிறது.

எல்லாருடைய நேரத்தையும், சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்து விட்ட படியால், நெருக்கமானவர்கள் கூட தங்களிடையே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி கவலைகளை பகிர்ந்து, ஆறுதல் பெறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

இது குறித்தான விழிப்புணர்வை, மனநல மருத்துவர்கள், தங்களின் கட்டுரைகள் மூலமாக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.


மா. கருணாநிதி


எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ., காவல்துறை கண்காணிப்பாளர்(ஓய்வு௸)
இ - மெயில்: spkaruna@gmail.com


ராயப்பேட்டை, ஆலந்தூர், வேளச்சேரி,வாசகர் கருத்து (1)

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    எது நன்மை எது தீமை என்று ஆராய்ந்து முடிவெடுக்கும் பக்குவம் இன்றைய தலைமுறையிடம் அடியோடு இல்லை . பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லை . தோல்வியை தாங்கி கொள்ளும் தைரியம் இல்லை. சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் தலைவர்கள் இப்போது இல்லை . இந்த கட்டுரை இந்த சமுதாயத்திற்கான எச்சரிக்கை மணி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்