Load Image
Advertisement

பங்களாவுக்குள் புகுந்த சிறுத்தை: 18மணி நேரத்திற்கு பிறகு வெளியேறியது!

 Leopard Entered Bungalow: Escaped After 18 Hours!   பங்களாவுக்குள் புகுந்த சிறுத்தை: 18மணி நேரத்திற்கு பிறகு வெளியேறியது!
ADVERTISEMENT
குன்னூர்: குன்னுாரில் பங்களாவுக்குள் புகுந்த சிறுத்தை 18 மணி நேரத்திற்கு பிறகு வெளியேறியது. சிறுத்தை தாக்கி 6 பேர் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக் லேண்ட் பகுதியில் நேற்று(நவ.,12) வளர்ப்பு நாயை துரத்தி வந்த சிறுத்தை விமலா என்பவரின் குடியிருப்புக்குள் புகுந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், வருவாய் ஊழியரை தாக்கியது. இதில் 6 பேர் காயமடைந்தனர். தீபாவளி பட்டாசுக்கள் வெடி சத்தம் காரணமாக பயத்தில் சிறுத்தை வெளியேறாமல் பங்களாவிற்குள் தஞ்சமடைந்து இருந்தது.

மாவட்ட வன அலுவலர் கவுதம் அறிவுரைப்படி முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் மேற்பார்வையில் சிறுத்தையை குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் பணி நடந்தது. மாலை வரை குடியிருப்பில் இருந்து சிறுத்தை செல்லாததால் மூன்று கதவுகளையும் திறந்து விட்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.


இன்று(நவ.,13) அனைத்து கேமராக்களையும் வனத்துறையினர், ஆய்வு செய்ததில் நேற்று இரவு 10 மணியளவில் சிறுத்தை குடியிருப்பை விட்டு வெளியேறியது கண்டறியப்பட்டது. 18 மணி நேரத்திற்கு பிறகு சிறுத்தை வெளியேறியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement