Load Image
Advertisement

தியேட்டரில் அட்டூழியம்: அமைச்சர் மகன், பேரனுக்கு அடி

Attack on ministers family  தியேட்டரில் அட்டூழியம்: அமைச்சர் மகன், பேரனுக்கு அடி
ADVERTISEMENT

சென்னை:இரவு நேர காட்சியின் போது, தியேட்டரில் விசில் அடித்தும், ஆபாசமாக பேசியும், அட்டூழியம் செய்தவர்களை கண்டித்த, அமைச்சரின் மகன் மற்றும் பேரன் மீது, மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சென்னை தி.நகர், கோபால கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 50. குடும்பத்தாருடன், தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, ஏ.ஜி.எஸ்., தியேட்டரில், நேற்று (நவ.,10)இரவு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை பார்த்து உள்ளார். உடன், 17 வயது மகனும் இருந்துள்ளார்.இவர்களின் பின் இருக்கையில், மூன்று பெண் தோழிகளுடன், ஆறு பேர் படம் பார்த்துள்ளனர்.

காட்சிக்கு, காட்சி விசில் அடித்தும், கைதட்டியும் உள்ளனர்.
விசில், கைத்தட்டல்
ஒரு கட்டத்தில் எல்லை மீறி, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆபாசமாகி பேசியுள்ளனர்.
இவர்களின் செய்கை, மற்றவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆறு பேரிடமும், 'கொஞ்சம் அமைதியாக படம் பார்க்கலாமே; இப்படி சத்தம் போட்டால், நாங்கள் எப்படி நிம்மதியாக பார்ப்பது' என்று ரமேஷ் கேட்டுள்ளார். அதற்கு, 'விசில், கைத்தட்டல் இல்லாமல் எப்படி படம் பார்ப்பது; நீங்கள் என்ன தியேட்டருக்கு புதிதா?' என, கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். ஆத்திரமடைந்த ரமேஷ், 'நாங்கள் யார் தெரியுமா' என, கேட்டுள்ளார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. ரமேஷ் மற்றும் அவரது, 17 வயது மகன் மீது, அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இருவருக்கும் மூக்கு, உதடுகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
தியேட்டர் நிர்வாகிகள்ஓடி வந்து, ரமேஷ் கும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டனர்.
அப்போது தான், காயமடைந்தவர்கள் வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் என்பது தெரியவந்தது.

ஓட்டம்இதையறிந்த அந்தக் கும்பல் தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்தது. பின், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், ரமேஷ் புகார் அளித்தார்.
மகனுடன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அமைச்சர் மகன் மற்றும் பேரன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய, மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரை தேடி வருகின்றனர்.
தியேட்டரில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.வாசகர் கருத்து (30)

 • Rowdy Baby - Velacheri ,அர்ஜென்டீனா

  ஒண்ணு 200 ரூபாய் ஊபீ இன்னொன்னு 200 கோடி ஊபீ... இரண்டும் ரவுடிகள். இதிலென்ன பெரிய ஆச்சர்யம்?

 • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

  தட்டி கேட்ட நடிகை காஞ்சனா..அடிபட்ட அமைச்சர் மகன் ..உரைகல் தலைப்பு போடும்போதே அல்லக்கைகளை உற்ச்சாகப்படுத்துகிறது..அல்லது உணர்ச்சியை தூண்டுகிறது ...என்ன ஒரு பாசம் ..மாற்றம் ஒன்றே மாறாதது..சோம்பு தூக்குவதிலும் ஒரு அளவு வேண்டும்

 • Raa - Chennai,இந்தியா

  மனுகொடுக்க வந்த அம்மணியை அடித்த கர்மா வேலை செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது..

 • ponssasi - chennai,இந்தியா

  காசு கொடுத்து நிம்மதி தேடி சாக்கடைக்கு (சினிமா) போகிறார்கள் மக்கள். அங்க போயி நான் யார் தெரியுமா? இது எல்லாம் தேவையா? உங்க ஆட்சி எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா? அடிபட்டு போலீஸ் கேஸ் ஆச்சுன்னா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தானே நீங்கள் சென்றிருக்கவேண்டும். ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்றீர்கள். ஒரு அடிதடி கூட மருத்துவம் பார்க்கும் தகுதிகூட அரசு மருத்துவமனைகளில் இல்லையா?

 • Mohan - Salem,இந்தியா

  80 சதவிகித மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு சாதாரணமான அடிப்படையான மரியாதை நிமித்தமான ஒரு வாழ்த்து கூட சொல்ல மனமில்லாத எதிர்ப்பு மனம் கொண்ட தலைவன் மற்றும் அவனது அடி வருடும் கூட்டத்தை சேர்ந்தவரே ,தி மு க எதிர்ப்பு என எதற்கு பாடிவிடுகிறீர்கள் ? தியேட்டரில் அடாவடி யார் செய்தாலும் குற்றம் தான். பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க வருபவர்களுக்கு இந்த மாதிரி தான் நடக்கிறது. காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கும்பல் வி சி அனுதாபிகளா என காவல் துறை விசாரிக்கலாம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement