Load Image
Advertisement

தினமலர் செய்தி எதிரொலி: 2024ம் ஆண்டு விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழக அரசு

Dinamalar news echo: Tamil Nadu government has officially announced the holidays in 2024   தினமலர் செய்தி எதிரொலி: 2024ம் ஆண்டு விடுமுறை நாட்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழக அரசு
ADVERTISEMENT
சென்னை: தினமலர் செய்தி எதிரொலியாக 2024 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில், அடுத்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல் குறித்த அரசாணை, அரசால் வெளியிடப்படும். இந்த ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை, கடந்த ஆண்டு அக்.,11ல் வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு, நவ., 2ல், அறிவிப்பு வெளியானது.

காலண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்கள், அக்டோபரிலேயே, காலண்டர் அச்சிடும் பணிகளை துவக்குவர். அதற்கு அரசு விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டியது அவசியம். வழக்கம்போல், இந்த ஆண்டும் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள், 2024ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களுக்காக காத்திருக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் நேற்று( நவ.,09) வரை, அரசு பொது விடுமுறை நாட்கள் விபரம் வெளியிடப்படவில்லை. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.

இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.


இதன்படி

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்

02. தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்

04. உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்

05. தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்

06. குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி

07. புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி

08. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்

09. தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்

10. ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்

11. தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு

12. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு

13. தொழிலாளர் தினம்( மே1) -புதன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்

16. சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்

17. கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.,26) - திங்கள்

18. விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி

19. மீலாடி நபி( செப்.,16) - திங்கள்

20. காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்

21. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி

22. விஜயதசமி( அக்.,12) - சனி

23. தீபாவளி ( அக்.,31) - வியாழன்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.


வாசகர் கருத்து (4)

  • ஆரூர் ரங் -

    முகர்ரம் தினம் எப்போது பண்டிகையானது? அது ஒரு துக்க தினமல்லவா? இஸ்லாம் பிறந்த சவுதி அரேபியர் கூட அதை அனுசரிப்பதில்லை. மேலும் மீலாது நபி விழாவை எந்த அரபு நாட்டு அரசும் கூட கொண்டாடுவதில்லை. விடுமுறையும் கிடையாது. 😶இங்கு மட்டும் வாக்கு வங்கிக்காக எதுவும் செய்வார்கள்.

  • Murthy - Bangalore,இந்தியா

    தெலுங்கு வருட பிறப்பு, மஹாவீர் ஜெயந்தி, கிருஷ்ணா ஜெயந்தி ஆகிய விடுமுறைகள் தேவை இல்லாதவைகள்.....

  • RAAJ68 -

    விநாயக சதுர்த்தி அன்று விடுமுறையா அல்லது முதல் நாளா? இந்த வரும் போல் எதாவது மந்திர தந்திரம் செய்யவில்லையே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement