Load Image
Advertisement

இங்கிலாந்து அணியை அறைக்குள் பூட்டி ‛‛டைம் ஆவுட் ஆக்கினால் பாக்., ஜெயிக்கலாம்: வாசிம் அக்ரம் கிண்டல்

How Pakistan Can Still Qualify For ICC Cricket World Cup Semifinal இங்கிலாந்து அணியை அறைக்குள் பூட்டி ‛‛டைம் ஆவுட் ஆக்கினால் பாக்., ஜெயிக்கலாம்: வாசிம் அக்ரம் கிண்டல்
ADVERTISEMENT
புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி நுழைய இரண்டே வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அப்படி நடந்தால், அரையிறுதியில் , அந்த அணி இந்தியாவை எதிர்கொள்ளும்.

இதற்கிடையே, ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமுக்குள் அடைத்து பாகிஸ்தான் அணி பூட்டி விட்டு, ‛டைம் அவுட்'' முறையில் இங்கிலாந்து அணியை அவுட் ஆக்கிவிடலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் பவுலர் வாசிம் அக்ரம் கிண்டல் அடித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று( நவ.,09) இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் நியூசிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றி மற்றும் 10 புள்ளிகளுடன் 0.74 ரன் ரேட்டில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பாக்., அணி அரை இறுதிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

முதலில், இங்கிலாந்து அணியை, 287 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் 400 ரன் எடுக்க வேண்டும், அடுத்து பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும்.

Latest Tamil News
இரண்டாவதாக, இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை, 2.4 ஓவர்களுக்குள், அதாவது 16 பந்துகளில் இலக்கை எட்ட வேண்டும்.

இப்படி இமாலய இலக்கை எட்டினால் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை மீண்டும் சந்திக்கலாம். இதனால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மங்கி வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இது நடக்குமா, நடக்காதா என்பது நாளை கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் முடிவு தெரிந்துவிடும்.

புள்ளிப்பட்டியலில் நான்காம் இடம் பிடிக்கும் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.


வாசகர் கருத்து (17)

  • T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா

    விடியலுக்கு துக்கநாள்

  • Tiruchanur - New Castle,யுனைடெட் கிங்டம்

    பொறுக்கிஸ்தான் பிணிகளுக்கு பிபிசி யம் இங்கே இருக்கும் the vidiyal ஆட்சி சொம்புகளும் என்ன்ன்னா சப்போர்ட். அவங்க மூஞ்சியில் சாணியை அடிக்கிறா மாதிரி அடிக்கணும்

  • பைரவர் சம்பத் குமார் -

    1).போட்டி என்பது வெற்றி தோல்விதான்.இது எல்லோருக்கும் எல்லா விளையாட்டு மற்றும் எல்லா அணிக்கும் பொருந்தும்.2). விளையாட்டு வீரர்களுக்கு நாடு என்பதை விட தன் அணி என்பதே முக்கியம்.2). பாகிஸ்தான் அடுத்த வரும் போட்டியை நல்லவிதமாக வெற்றி பெற வேண்டும்.3). அரையிறுதிக்கு முன்னேறவிட்டால் பரவாயில்லை அடுத்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கு முக்கியம்.4). அதேபோல் வரும் எல்லா போட்டிகளிலும் நமது பாரத அணி வெற்றிவாகை சூட இந்தியர் ஆகிய நாம் அவர்களுக்கு தோளோடு தோள் ஊக்கம் அளிப்போம்.

  • செந்தமிழ் கார்த்திக் - Madurai to Chennai ,இந்தியா

    அக்ரம் சொன்னது சரி தான். பாகிஸ்தான் வீரர்களுக்கு செவிட்டில் அறைந்தது போல இருக்கும். உலக கோப்பையில் விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லை அவர்களுக்கு, எதோ உள்ளூர் போட்டியில் விளையாடுவதை போல விளையாடினர். ரிஸ்வான் மட்டும் இல்லை என்றால் பாகிஸ்தான் ஜீரோ தான். உலகின் நம்பர் ஒன் ஒர்ஸ்ட் பீல்டிங் என்றால் அது பாகிஸ்தான் தான்.

  • Sharvintej - மதுரை ,இந்தியா

    பாய் , அணியை உங்களால் கட்டி காப்பற்ற முடியவில்லை என்றால் தி. மு. க விடம் விட்டு விடுங்கள் .தி. மு. க அன்பும் ஆதரவும் பெற்ற ஒரே கிரிக்கெட் அணி பாக். அணி மட்டுமே ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement