Load Image
Advertisement

தினமலர் செய்தி எதிரொலி ஆழ்துளை கிணறு அமைப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில், பாரதி நகர், வெங்கட்ராமன் தெரு, கோபால் தெரு, கோபால் குறுக்கு தெரு உள்ளிட்ட ஒன்பது தெருக்கள் உள்ளன.

இதில், கோபால் குறுக்கு தெருவில், குடிநீர் தேவை பூர்த்தி செய்வதற்கு, கை பம்பு அமைத்தனர்.

பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யாத போது, அந்த தெருவைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை கை பம்பு பூர்த்தி செய்து வந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டும் போது, கை பம்பு அகற்றவில்லை. கழிவுநீர் கால்வாய் நடுவே கைபம்பு இருப்பதால், அப்பகுதி மக்கள் தண்ணீரை உபயோகப்படுத்த முடியாமல், கைபம்பு துருபிடித்த நிலையில் இருந்தது.

இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வெங்கட்ராமன் தெருவில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் கட்டடம் அருகே, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கை பம்பு அமைத்தால், குடிநீர் தேவை பூர்த்தியாகும் என, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement