Load Image
Advertisement

பின்னலாடை துறையினரை ஈர்க்கத் துடிக்கும் வட மாநிலங்கள்

Tirupur Knitwear Industry: Northern states trying to attract knitwear industry  பின்னலாடை துறையினரை ஈர்க்கத் துடிக்கும் வட மாநிலங்கள்
ADVERTISEMENT
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை துறையினரை, சலுகைகளுடன் தொழில் துவங்க வருமாறு, வட மாநில அரசுகள் ஈர்க்கத் துவங்கியுள்ளன.

கிராமமாக இருந்த திருப்பூர், உலக வரைபடத்தில் இடம்பெறும் அளவு அபரிமித வளர்ச்சியைப் பெற்றதற்குக் காரணம் - கோடிக்கணக்கில் அன்னியச்செலாவணியைப் பெற்றுத்தரும் பின்னலாடைத் தொழில்.

வெளி மாவட்ட, வெளிமாநில மக்கள் லட்சக்கணக்கானோர், இதன் மூலம், வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். பின்னலாடைத் தொழிலை, வட மாநிலங்களுக்கு நகர்த்தும் முயற்சி, சமீப காலமாக முன்னெடுக்கப்படுகிறது.

Latest Tamil News

வட மாநிலங்களில் சலுகை மத்திய பிரதேச மாநிலம், சிறப்பு சலுகைகள் வழங்கி, திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், தொழில் துவங்க வருமாறு அழைத்தது. மத்திய அரசு சலுகையுடன், திருப்பூரில் உள்ள சில நிறுவனங்கள் புதிய யூனிட்களை, அங்கு திறக்கவும் தயாராகிவிட்டன.பீஹார் மாநில தொழில் முதலீட்டு அமைப்பு, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. திருப்பூர் பின்னலாடைத்துறையினர், பீஹாரில் தொழில் துவங்க முன்வர வேண்டும்; பீஹார் தொழிலாளருக்கு, திறன் பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்காக, ஒவ்வொரு தொழிலாளிக்கும், தலா, 5000 ரூபாய், மாதாந்திர ஊக்கத்தொகை; மெஷின்கள் மற்றும் தொழிற்சாலை அமைக்க, அதிகபட்சம் 10 கோடி ரூபாய் வரை முதலீட்டு மானியம்; தொழிலாளர் திறன் வளர்ப்புக்காக, மாதம், தலா, 20 ஆயிரம் ரூபாய் மானியம்; மின்சாரம், யூனிட் இரண்டு ரூபாய்க்கு வினியோகம்; மாநில ஜி.எஸ்.டி., வரியில், 100 சதவீத விலக்கு; முத்திரைத்தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தில், 100 சதவீத சலுகை; ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வரையிலான, ஏற்றுமதி மேம்பாட்டு ஊக்குவிப்பு நிதி உள்ளிட்டவை, பீஹார் மாநில அரசு அறிவித்துள்ள சலுகைகள்.

திருப்பூர் வந்து, பின்னலாடைகளை வாங்கி சென்று கேரளாவில் விற்பது வழக்கம். கொரோனாவுக்கு பிறகு, கேரளாவிலேயே, யூனிட்டுகள் துவக்கி, ஆடை தயாரிக்க துவங்கிவிட்டனர். இது, உள்நாட்டு பின்னலாடை விற்பனையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டல் - கழித்தல்பின்னலாடைத்துறையைப் பொறுத்தவரை வடமாநில தொழிலாளர்களையே திருப்பூர் சமீப காலமாக பெரிதும் நம்பி யுள்ளது. வடமாநிலத்திலேயே, சலுகையுடன் தொழில் துவங்கலாமே என்று, பல்வேறு கோணங்களில், கூட்டி, கழித்து பார்த்து, தொழில்துறையினர் சிலர் கணக்குபோட துவங்கியுள்ளனர்.

அதேசமயம், அரை நுாற்றாண்டு காலமாக பேணிப் பாதுகாத்து வளர்த்த தொழிலை, வடமாநிலங்களுக்கு தாரை வார்க்க கூடாது; தமிழக அரசு, திருப்பூரில் பின்னலாடை தொழில் கம்பீர நடைபோட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் பலர் முன்வைக்கின்றனர்.

பாதுகாக்க வேண்டும்திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: 'குட்டி ஜப்பான்', 'டாலர் சிட்டி' என்றெல்லாம் பெருமை பெற்ற திருப்பூர், ஒன்றரை ஆண்டுகளாக கடும் சோதனையை சந்தித்து வருகிறது. அபரிமித மின் கட்டண உயர்வு, நிலை கட்டண உயர்வு, 'பீக்ஹவர்' கட்டண உயர்வால், தலைகீழாக மாறிவிட்டது. பின்னலாடை தொழில் என்பது, திருப்பூரின் தனி அடையாளம்.

அதை பாதுகாக்க வேண்டிய காலகட்டம் உருவாகிவிட்டது. தொழிலை, வடமாநிலங்களுக்கு நகர்த்தி செல்ல, கடும் முயற்சி நடக்கிறது. திருப்பூரின் ஜீவநாடியாக இருக்கும் பின்னலாடை தொழிலை, தக்க வைக்க வேண்டும்; தொழில்துறையினர் இணைந்து, பின்னலாடை தொழிலை பாதுகாக்க வேறுபாடு பார்க்காமல் கரம் கோர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.வாசகர் கருத்து (9)

 • duruvasar - indraprastham,இந்தியா

  பரவாயில்லையே, மற்ற மாநிலங்களில் தமிழகத்தைப்போல்வெளிநாட்டுக்கு சென்று முதலீட்டை ஈர்காமல் உள்நாட்டிலேயே ஈர்க்கிறார்

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  மத்திய அரசின் உதய் திட்டத்தின் தாக்கம்

 • அசோகன் -

  இது திராவிட மண்.... இங்கே தொழில் வளர கூடாது.... வளர விடமாட்டோம்..... இங்கே சாராயம் மட்டுமே உற்பத்தி செய்து குடிக்க வைக்கப்படும்.....

 • Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா

  ஆமாம் அரசு கவனமுடன் செயல் பட்டு தமிழ்நாடு தொழில் துறையில் முநேரவும், தன் இடத்தை தக்க வைக்கவும் விரைந்து செயல் படவேண்டும். மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  டாஸ்மாக் ஐ ஒட்டுமொத்தமாக மூட வேண்டும். சின்ன ஞாயிறு என்ற பெயரால், திங்கள் அன்று எவனும் வேலைக்கு வருவது இல்லை. குடித்து குப்புற அடித்து விழுந்து கிடக்கிறார்கள் ..... திருட்டு திராவிடம் உள்ளவரை திருப்பூர் உருப்படாது ... பின்னலாடை தொழிலை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வது மிக நல்லது ..திருட்டு திராவிட அல்லக்கைகளுக்கு கப்பம் செலுத்தி மாளாது ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement