Load Image
Advertisement

காசாவில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்

 Israel Expands Ground Attack in Gaza     காசாவில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்
ADVERTISEMENT
கான் யூனிஸ்: காசாவில், ஒருபக்கம் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மறுபக்கம் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் ஒரு மாதமாக மோதல் நடக்கிறது. இதில், பாலஸ்தீனத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட 8,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில், 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது படிப்படியாக, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே, காசாவின் பல பகுதிகளுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் படைகள், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து அழித்தனர்.

இதற்கிடையே, காசாவில் மருத்துவமனைகள் மற்றும் தங்குமிடங்கள் அருகே, இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக, ஐ.நா., சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் தங்கியுள்ள இடங்கள் மற்றும் மருத்துவமனை அருகே தாக்குதல் நடப்பதால், காசாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், காசாவின் வடக்கு பகுதியில், இஸ்ரேல் படைகள் ஊடுருவி உள்ளன. இது தொடர்பான வீடியோ, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

அதில், காசாவில் இஸ்ரேல் ராணுவ வாகனங்கள் ரோந்து செல்வதும், கட்டடங்கள் மற்றும் வீடுகளில், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதும் தெரிகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களில், காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் 600க்கும் மேற்பட்ட பதுங்குமிடங்களை அழித்ததாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட, ஐரோப்பிய நாடான ஜெர்மனைச் சேர்ந்த 'டாட்டூ' கலைஞர் ஷானி லுாக் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக, இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து (20)

  • Indian - Vellore,இந்தியா

    உயிர் தப்பிச்சால் போதும் என்று புறமுதுகிட்டு திரும்பி ஓடி வருவதையும் நாம் பார்ப்போம் காத்திருக்கும்

  • N SASIKUMAR YADHAV -

    கடைசி பயங்கரவாத இஸ்லாமியன் இருக்கும்வரை தாக்குதல் தொடரவேண்டும் உலகநாடுகள் இஸ்ரேலுக்கு பொருளாதார ஆதரவு கொடுக்க வேண்டும்

  • RK -

    இஸ்ராலியர்களின் சேவை இந்தியாவிற்கும் தேவை!!!.

  • RAMESH - chennai,இந்தியா

    எனக்கு குத்து படத்துல இருந்து ஒரு பாட்டு நியாபகத்துக்கு வருது . போட்டு தாக்கு, போட்டு தாக்கு , போட்டு போட்டு போட்டு, போட்டு தாக்கு - கடைசி ஹமாஸ் தீவிரவாதி கொல்லப்படும்வரை இந்த பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    எஜமான் எப்போ மொத்தமா முடிப்பீங்க அமைதி கூட்டத்தை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்