Load Image
Advertisement

சொத்து அபகரித்ததாக புகார்: பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார்

 Actress Gauthami resigned from BJP   சொத்து அபகரித்ததாக புகார்: பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார்
ADVERTISEMENT
சென்னை:பா.ஜ., நிர்வாகி அழகப்பன் உள்ளிட்டோர் தனது ரூ.25 கோடி சொத்துகளை அபகரித்ததாக நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான பிரச்னையில், இன்று (அக்.,23) பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார்.

நடிகை கவுதமி, கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகள் உட்பட தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்ததாக இரு புகார்களை கடந்த செப்டம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்தார். அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்தார். மோசடி செய்த அழகப்பனுக்கு மூத்த பா.ஜ., தலைவர்கள் சிலர் உதவுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தான் 25 ஆண்டு காலமாக பா.ஜ.,வில் இருந்தேன். பா.ஜ., நிர்வாகியான அழகப்பன் என்பவர் என்னை மிரட்டி சொத்துக்களை பறித்தார் . இது தொடர்பாக யாரும் கேள்வி கேட்காமல் அவருக்கு ஆதரவாக இருந்தனர். மன வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்த சில மணி நேரத்தில், அவர் அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (72)

  • venugopal s -

    தமிழக அரசியலில் அயோக்கியர்களின் கடைசி புகலிடமாக பாஜக விளங்குகிறது!

  • sankaran - hyderabad,இந்தியா

    சினிமா நடிகர்கள் அரசியலுக்கு தேவை இல்லை..

  • ராஜா -

    இதை தான் அழகாக ஆங்கிலத்தில் This for that என்று சொல்லுவார்கள். கட்சியில் சேர்வதும் விலகுவதும் கவுதமியின் சொந்த விருப்பம். ஆனால், கட்சியில் இருந்து விலகினால் தான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி அதை தன் அதிகாரத்தின் கீழ் உள்ள காவல்துறையை வைத்து செய்து காட்டியது எந்த ரகம் என்று மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

  • Saai Sundharamurthy AVK -

    அழகப்பனுக்கும் பாஜக கட்சிக்கும் சம்பந்தமில்லை எனும் போது எப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    //பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்த சில மணி நேரத்தில், அவர் அளித்த இரு புகார்களிலும்,சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்./

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்