Load Image
Advertisement

‛ முதலில் முட்டை வந்ததா, கோழி வந்ததா? : உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

 The egg came first, the chicken came first?: Annamalai question for Udayanidhi    ‛ முதலில் முட்டை வந்ததா, கோழி வந்ததா? : உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி
ADVERTISEMENT
சென்னை: அமைச்சர் உதயநிதி, முதலில் முட்டை வந்துச்சா? இல்லை கோழி முதலில் வந்துச்சா? என்று சொல்லட்டும் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரசியலை பொறுத்தவரைக்கு ஒரு கட்சியில் இரண்டு விதத்தில் வளர்ச்சி நடக்கும். பாஜ., வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. ஒரு கொடி கம்பத்தை மறைப்பதால் கல்யாணம் நின்று விடுமா?. கல்யாணம் நடக்க தான் போகிறது. ஒரு சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள்.

எத்தனை இடங்களில் தி.மு.க கொடி கம்பங்களுக்கு அனுமதி தந்துள்ளனர்?. மக்களுக்கு தொல்லை ஏற்படும் வகையில் தான் கொடி கம்பங்கள் வைக்கக் கூடாது.


ஏதாவது ஒரு குழந்தை 'நீட்' தேர்வுக்கு எதிராக இருக்கிறதா?. யாருமே ‛நீட்' தேர்வுக்கு எதிராக கிடையாது. 2016ல் இருந்து இதனை வைத்து தி.மு.க அரசியல் செய்து வருகிறது.

ஒரு முட்டை கொண்டு வந்து, ‛ நீட்'டுக்கான ரகசியம் என உதயநிதி சொல்கிறார். ‛நீட்'டுக்கான ரகசியம் முட்டையா?. முதலில் உதயநிதி முட்டை முதலில் வந்துச்சா? கோழி முதலில் வந்துச்சா? என சொல்லட்டும். அதன் பிறகு ‛நீட்' ரகசியத்தை சொல்லட்டும்.

தமிழக மக்கள் ‛நீட்'டை ஏற்று கொண்டார்கள். உதயநிதி போன்றனவர்கள் அவர்களும் படிக்கவில்லை. குழந்தைகளும் படிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். மக்களை படிக்க விடக் கூடாது என்று நினைப்பதால் தான் தமிழகம் கல்வியில் பின்தங்கி உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


வாசகர் கருத்து (45)

  • அப்புசாமி -

    மனிதனே (கரு) முட்டையிலிருந்து தான் பிறக்கிறான். முட்டை தான் முதலில் வந்திருக்கணும்.

  • அப்புசாமி -

    என்ன பெரிய நுட் ரகசியம்? மத்தியில்.பா.ஜ வுக்கோ, காங்கிரசுக்கோ பெரும்பான்மை.பெற 40 சீட்டுகள்.குறைஞ்சா தி.மு.க கையில் ஒரு 25 சீட்டு இருந்தா நீட் விலக்கு பெற வாய்ப்பு பிரகாசமா இருக்கு.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பரிணாம வளர்ச்சி விஞ்ஞானத்தின்படி முதலில் வந்தது முட்டை. அதிலிருந்து கோழி வந்தது என்பது தான் சரியான விடை. பல பறவை இனங்களில் ஒரு காலகட்டத்தில் நடந்த ஒரு ஜெனட்டிக் மாறுதல் தான் கோழி. பரிணாம வளர்ச்சியில், முட்டையில் இருந்து வெளிவந்த பல விதமான பறவைகளில் ஒரு இனமாக கோழி உருவாகியுள்ளது. எது எப்படி இருந்தால் என்ன, அடிச்சி குழம்பு வச்சா ருசியாக உள்ளது. அது தான் முக்கியம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    It is said that God, wishing to the world, produced an egg as big as the cosmos. God meditated for a thousand years sitting inside the egg and when the egg burst, the Lord himself was born out of the egg as the Progenitor of the universe (“He made Himself by Himself.”, Taitiriya Upanishad: 2.7. 1). அதாவது கடவுள் பெரிய முட்டையை படைத்து அதை ஆயிரம் ஆண்டுகள் அடைகாத்து அது வெடிக்க அந்த முட்டையில் இருந்து அண்டங்களும், கடவுளும் வெளி வந்ததாக உபநிஷதம் சொல்கிறது. "அண்டா" விலிருந்து அண்டம். அம்புட்டும் கொழுந்து விட்டு எரியும் அறிவு..

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அவர் தான் வாங்கிய மார்க்குகளை நினைவூட்டுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்