Load Image
Advertisement

அரசியல்வாதியும், சவப்பெட்டியும்! சிந்தனைக்களம்

 A politician and a coffin! The field of thought  அரசியல்வாதியும், சவப்பெட்டியும்! சிந்தனைக்களம்
ADVERTISEMENT
சமீபத்திய ஊடகங்களிலும், பத்திரிகை களிலும் செய்திகளை பார்த்து நெஞ்சுப் பதைபதைக்கிறது; மூச்சு நின்று விடும் போலிருக்கிறது.

பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஊழல் கொள்ளைக்கு, எல்லையே இல்லை. ஒருவர், சிறைக்கு சென்று மன்றாடி வெளிவர முயற்சிக்கிறார்.

ஆனால் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பாக முன் இயற்கை வளமான செம்மண்ணை எடுத்து கடத்தி பல கோடி சம்பாதித்திருக்கிறார்; இப்படி சம்பாதித்த பணத்தை மேல்நாட்டில் முதலீடு செய்து இருக்கிறார். மற்றொருவர், அளவுக்கு மேல் சொத்து சேர்த்து, கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

கணக்கற்ற கம்பெனிகள், நான்கு மருத்துவக் கல்லுாரிகள், இரண்டு பல் மருத்துவக் கல்லுாரி, பொறியியல், மருத்துவமனை, சாராய ஆலை, அண்டை நாடான இலங்கையின், ஹம்பன்தோட்டா துறைமுகத்தில், 20,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைத்து... தற்போது எம்.பி.,யாக இருக்கிறார் இவர்!

வாடகை வீட்டில் வாழ்ந்தார்தன் மருத்துவக் கல்லுாரியின் பிணவறையில், பிணத்தை அடுக்கும் சவப்பெட்டியில், பணத்தை மறைத்து வைத்தவர் இவர். இவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? ஆளுங்கட்சி எம்.பி., இவர்.

எதிர்க்கட்சிகள் செய்த மோசடிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. தன் படுக்கையின் கீழ் பல கோடி ரூபாயை அடுத்து வைத்து, தன்னைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் ஒருவருக்கு ஒரு கத்தை என, வாரி வழங்கிய அந்த 'மாஜி' மகானுபாவர், எதுவுமே நடக்காதது போல், மகிழ்ச்சியாக இன்னும் உலவியபடி தான் இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவர் சட்டைப் பையில் மிகக் குறைந்த அளவிலேயே பணம் இருந்தது; காலம் பூராவும், வாடகை வீட்டிலேயே வாழ்ந்தவர்.

மக்கள் நலனைப் பற்றி சிறிதும் சிந்திக்காத இவர்களின் மூச்சு நின்றவுடன், இவர் உடலை வாங்க, யாரும் விரும்புவதில்லை என்பது, என் மருத்துவத் துறை அனுபவம்.

இத்தகைய அரசியல்வாதிகள், எந்த சூழலிலும் உண்மை பேசியதில்லை. நிஜமான பகுத்தறிவும், சுய சிந்தனையும் இல்லாமல், 24 மணி நேரமும் பணத்தை எந்தெந்த வகையில் அபகரிக்கலாம் என்ற திருட்டு சிந்தனையுடன் தான் வாழ்கின்றனர்.

நயவஞ்சக கூட்டம்இவர்கள் அனைவரும் திட்டம்போட்டு, மக்கள் தலையில் சுமத்திய வரியால், சுரண்டிய பணத்தால், தற்போதைய நிலையில், ஒவ்வொரு குடிமகன் தலையிலும், 2 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

நாம் உபயோகிக்கக் கூடிய சாலை, மின்சாரம், குடிநீர் என ஒவ்வொரு திட்டத்திற்கும் இடைச்செறுகலாய் கமிஷன் வாங்கி, நாம் துாக்கி எறியும் குப்பையை அப்புறப்படுத்துவதில் கூட, காசு பார்க்கும் நயவஞ்சகக் கூட்டம் இது.

இப்படி அள்ளிச் செல்லும் பணத்தில் கட்டப்படும் இவர்களின் பளிங்கு மாளிகையில், இவர்களுக்கென வைக்கப்படும் சவப்பெட்டியில், இவர்களின் உடல், 24 மணி நேரம் வரை வைக்கப்படுவதுண்டா?

வாசனை திரவியம் என்ன, மலர் வளையங்கள் என்ன, மனைவியரும், துணைவியரும் அழும் அழுகை என்ன... நாம் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்!

மக்களை மிதிப்பவர்கள்இதை விடுங்கள்... சாராய ஊறலாய் திகழும் இவர்களின் மேனியில் உயிர் இருக்கும்போது, பிடித்த உணவை உண்ண முடிந்ததில்லை; காரணம், சுகர், பி.பி., இதய வால்வு அடைப்பு, வயிறு கோளாறு, கிட்னி கோளாறு என ஏகப்பட்ட பிரச்னைகளுடன், உலா வருவர்.

சட்டத்தையும், நீதியையும் உடைத்து, அவற்றையும், நம் மக்களையும் காலடியில் போட்டு மிதிப்பவர்களுக்கு நேரும் கதியை, நாளுக்கு நாள் பார்க்கிறோமே!

தேவையா இந்த கதிஅநீதிவாதியான ஒருவர், 'எங்களைக் காப்பாற்ற, நீங்க.ௌல்லாம் சட்டம் படிக்கணும்' என, இளைஞர்களைப் பார்த்து முழங்குகிறார்.

எப்படி... இவரும், இவர் கட்சிக்காரர்களும் அராஜகமான முறையில் பணம் சம்பாதிப்பராம்; அது நியாயம் தான் என அங்கீகரிப்பதற்காக, தற்போதைய இளைஞர்கள் சட்டம் படிக்கணுமாம். இது எப்படி இருக்கு?

இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது, நெஞ்சு பொறுக்குதில்லை. காலன் கூப்பிடும் முன், கொடிய நோயால் அணுஅணுவாக பாதிக்கப்பட்டு, துன்பப்பட்டு, இவர்கள் கதறி அழுவதைப் பார்க்கும் மருத்துவர்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த கதி தேவையா இந்த அரசியல்வாதிகளுக்கு?

பேராசிரியர் டாக்டர்

எஸ்.அர்த்தநாரி,

இதய ஊடுருவல் நிபுணர்,

டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக், ராயப்பேட்டை, சென்னை - 14.

தொலைபேசி: 98843 53288வாசகர் கருத்து (3)

 • sugumar s - CHENNAI,இந்தியா

  So long as people are fools they will confiscate public money

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  சவப்பெட்டிக்குள் போனது நாணயம் (பணம்) மட்டுமல்ல .நாணயம் (நேர்மை) கூடத்தான் .

 • kumar - nandhivaram,இந்தியா

  நீங்கள் சொன்னது அத்தனையும் தற்போது நடந்து கொண்டிருப்பவைதான். அப்பக்கூட இந்த பொறம்போக்கு சாக்கடை அரசியவாதிகள் திருந்தமாட்டான்கள். சிந்திக்காமல் ஓட்டுப் போடுற முட்டாள் மக்களும் திருந்தாத ஜென்மங்கள். உலகம் அழிந்தால் தான் மாறும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement