சென்னை: போராட்டத்தை வாபஸ் பெற்று, பயிற்சிக்கும், பணிக்கும் செல்ல வேண்டும் என, ஆசிரியர் சங்கங்களை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று மாலை, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி:
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, தமிழகத்தில், 2009 ஜூன் 1 க்கு பின் நியமிக்கப்பட்ட அனைத்து துறைகளின் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய முரண்பாடு ஏற்பட்டது. அது போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க, நிதித்துறை செயலர், பள்ளிக்கல்வி செயலர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள், 3 மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.
எனவே, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்துள்ள நிலையிலும், முக்கியமான எண்ணும், எழுத்தும் திட்டத்தில் பயிற்சி நடப்பதாலும், வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டு, பயிற்சியில் பங்கேற்கவும், பணிக்கு திரும்ப வேண்டும்.
ஊதியம், வயது வரம்பு உயர்வு
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு, மாதம், 2,500 ரூபாய் ஊதியம் உயர்த்தி, 12,500 ரூபாயாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 10 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான காப்பீட்டு தொகையை அரசே செலுத்தும். எனவே, சிறப்பாசிரியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு செல்ல வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து, ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு, பணி நியமன உச்ச வயது வரம்பு, பொது பிரிவினருக்கு, 53ம்; மற்றவர்களுக்கு, 58மாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்துக்கு கொண்டு வரும் அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
மொத்தம், 1,506 ஊர்ப்புற நுாலகர்களுக்கு 3ம் நிலை நுாலகர் பதவி உயர்வு அளிக்கப்படும்.
ஆசிரியர்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் பேட்டியின் போது, உடனிருந்தனர்.
ஆனால், அமைச்சரின் இந்த அறிவிப்புகள் எதுவும் போராடும் ஆசிரியர் சங்கங்களை திருப்திப்படுத்தவில்லை. எனவே, போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.
வாசகர் கருத்து (6)
உதய சூரியனுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த வில்லை இன்னும் இவர்களுக்கு விடியாத காலமாக 58 வயதில் கூட கிடையாது நிரந்தர வேலை. இனி வரும் காலம் என்ன செய்வார்கள் இந்த ஆசிரியர்கள்?
ஆடியோ ரிலீஸில் பிஸியாக இருந்து மக்கள் பணி ஆற்றுபவருக்கு ஆசிரியர்கள் இப்படி இடையூறு அளிப்பதில் நியாயமில்லை.
ஒருவர் ஐம்பத்தியெட்டு வயதில் பணிநியமனம் செய்யப்பட்டால் எத்தனை வருடங்களுக்கு பனி செய்வர்?
தேர்தல் பூத்ல அதிகாரிகளா உக்கார்ந்து கொண்டு கேடுகெட்ட விடியல் வர கள்ள ஓட்டு எல்லாம் போட்டு கொண்டுவந்தீங்கள்ள இப்போ அனுபவி மக்கா....சந்தோசமா இருக்கு ...
திருந்த மாட்டார்கள்.