ரஷ்யாவிலிருந்து வெளிவரும் ஆர்.டி. என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள வீடியோவில் ரஷ்ய அதிபர் விளாடி மிர்புடின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது,
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிதி பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பிரதமர் மோடி ஒரு புத்திசாலி மனிதர். குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் மோதலில் ரஷ்யா மீது பழி சுமத்தாமல், அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்தார். இந்தியாவுடன் ரஷ்யா அரசியல் ரீதியாக நல்ல நட்புறவு வைத்துள்ளது. ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது ஒரு மைல்கல். இதனை ரஷ்யா வரவேற்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடி சரியானதைச் செய்கிறார். இவ்வாறு புடின் பேசினார்.
வாசகர் கருத்து (25)
மோடி அல்லது புடின் என்ற தனி மனிதர்களை குறிப்பிடுவது தவறு. அவர் சொல்லியது போல காலங்காலமாக அரசியல் ரீதியான நட்பு இரு நாடுகளிடையே உள்ளது. நாம் ஒவ்வொருமுறை விழும்போதும் நம்மை தூக்கி விட்டது அவர்கள் தான். நேரு, இந்திரா காலங்களில் இருந்து நம் நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா தான் செய்து வருகிறது. அதனால் நன்றி மறப்பது நன்றன்று.
நல்ல வாயில் வடை சுடுவதை தான் அப்படி சொல்லியுள்ளார் புடின் அவர்கள் அவருக்கும் தெரிந்து விட்டது போல
உன்னோட விடியல் வாயில் வடை சுடுவதை விடவா?
புடின் ஒரு சர்வாதிகாரி. அடுத்த பல வருடங்களுக்கு தானே அதிபராக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை சட்ட ரீதியாக செய்தவர். சீனாவிலும் அதே நிலை. மக்கள் ஜனநாயகத்தை படுகுழியில் புதைத்தவர்கள். ஆகையால் பாம்பின் கால் பாம்பறியும்
ஓ டுமிழ்நாட்டுல ஜனநாயகம் இருக்குதா ..பள்ளு இழிகுது போயி வெளிய சுத்தி பார் சொம்பு
Both are super doper mans
mans அல்ல men
பிரதமர் மோடியை எந்த அதிபரோ அல்லது நாடோ பாராட்டினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த அறிவாலய உபிக்கள் அந்த அதிபரையும் அந்த நாட்டையும் திட்டுறானுக. அதேபோல் எந்த நாடோ அல்லது அதிபரோ இந்தியாவுக்கு எதிராக பேசினால் உடனே அந்த நாட்டுக்கு ஆதரவாக பேசி அந்த அதிபர்களுக்கு முட்டு கொடுக்க ஓடுறானுங்க! பிரதமர் மோடியை எதிர்ப்பதாக நினைத்து தன் தாய் நாட்டையே காட்டிக் கொடுக்கும் இவனுக என்ன ஜென்மம்னே தெரியல சோத்துல உப்பு போட்டுதான் திங்கிறானுகளா?