Load Image
Advertisement

முடிவு பா.ஜ., கையில்!

Result BJP, in hand!   முடிவு பா.ஜ., கையில்!
ADVERTISEMENT

சொ.முத்துசாமி, பாளையங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிவு குறித்து, பா.ஜ.,வினுள்ளேயே வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. இது தேவை இல்லாத வருத்தம்.

அ.தி.மு.க.,வின் ஊழல் மன்னர்களை அருகில் வைத்தபடி, தி.மு.க.,வின் பட்டியலை படிப்பதை யாரால் ரசிக்க முடியும்?

பார்லி., தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையிலிருந்து, பா.ஜ., வெளிவர வேண்டும். வெறும், 10 சீட்டுக்காக, தி.மு.க.,வுக்கு அடிமையாகி விட்ட காங்கிரசின் நிலை, பா.ஜ.,வுக்கு ஏற்பட வேண்டாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கம்யூ., வின் நிலையும் இது தான்.
Latest Tamil News
'தமிழகத்தில், திராவிட இயக்கத்துக்கு மாற்று, மற்றொரு திராவிட இயக்கம் தான்' என்ற நிலை மாற வேண்டுமானால், இந்த கூட்டங்களுடன் கூட்டணியே வைக்கக் கூடாது.

'மக்கள் ஆதரவு வேண்டாமா?' என்ற கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறேன்...

மஹாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் இருந்து பாரதத்திற்கு வருவதற்கு முன்பும், பாரதத்தில் காங்கிரஸ் இயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் காங்கிரசுக்கு காந்தி தலைமை ஏற்ற பின்பு தான், காங்கிரஸ், மக்கள் இயக்கமாக மாறியது.

பாரதத்திற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பாமர மக்களுக்கும் கூட ஏற்பட்டது!

அதே போல், பா.ஜ., தமிழகத்தில் கால் பதித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும், அண்ணாமலை வந்த பின் தான், அது மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; முடிவு, பா.ஜ., கையில்!


வாசகர் கருத்து (37)

  • venugopal s -

    பாஜகவினரின் அதிமுக மீதான வெறுப்பு, கோபம் எல்லாமே,"சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்"என்கிற கதை தான்!

  • jayvee - chennai,இந்தியா

    அரசியலில் சசிகலாவையே போட்டு பார்த்தவர் அன்ணன்ணன் எடப்பாடி.. அவருடன் கூட்டணி வைப்பது என்பது நல்லதல்ல. மேலும் சிறுபான்மையினர் வாக்குகள் வந்தால்தான் தேர்தலில் ஓரளவிற்காவது வெற்றி காணமுடியும் என்று நினைக்கிறார்.. அதே சமயத்தில் திமுக ஆட்சியின் சீர்கேட்டினால் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் அதனால் BJP இல்லாமலே தேர்தலை சந்திக்கலாம் என்றும் நினைக்கிறார் .. அதிமுக மற்றும் BJP தனித்து நின்றார்கள் அது திமுகவிற்கு பாதகமாகத்தான் முடியும்.. அப்படியே நடக்கட்டும். தேர்தலுக்கு பின் ஒருவேளை BJP பெருமபான்மை பெற அதிமுக உதவி தேவை என்றால் அதிமுகவை அணுகலாம்.. அதற்க்கு விலையாக ஊழல் அதிமுக நபர்களை காப்பாற்றவேண்டும் என்று எடப்பாடி நிபந்தனை மற்றும் எதிரி முகாமில் உள்ள OPS சசிகலா மற்றும் தினகரன் மீதான வழக்குகளை முடிக்கிவிட அல்லது பதிவுசெய்யவும் நிபந்தனை விதிக்கலாம் .. நடப்பது நல்லதாகவே நடக்கும்

  • K S Muniappan - Erode ,இந்தியா

    Could have waited till 2024 election stleast

  • JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா

    60 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு செய்த நன்மை விட அதில் உள்ள தலைவர்கள் சொத்து சேர்த்தது தான் அதிகம். பாமர மக்களை ஏமாற்றி இலவசங்களுக்கு அடிமையாக்கி சினிமா என்னும் விஷத்தை மக்கள் மனங்களில் தூவி போதைக்கு அடிமையாக்கி பெண்கள் மனதில் பயத்தை விதைத்து குழந்தைகள் மனதில் தீயதை பதிய வைத்து ஜாதி மதம் இன வேறுபாடு வைத்து தமிழக மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் இந்த திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்து தமிழக மக்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்க மகாத்மா காந்தி போல் ஒருவர் வேண்டும். அவர் அண்ணாமலை போல் தரணி காப்பவறாக இருக்க வேண்டும்

  • Bala - chennai,இந்தியா

    Dear Mr Prime Minister of Bharath, please support Annamalaiji for BJP to lead a separate alliance in Tamil Nadu for the coming parliament Election 2024. Victory is yours. Thank you

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement