சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட, 11நகரங்கள், பிரதமரின் இ - பஸ் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுதும், 100 நகரங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நகரங்கள், இதை ஒட்டிய பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, இரு சக்கர வாகனங்கள் முதல் பஸ்கள் வரை மின்சார வாகனங்கள் வந்துள்ளன. பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு மற்றும் மாசு குறைப்புக்கு இது பேருதவியாக உள்ளது.
குறிப்பிட்ட சில தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் இ - பஸ் சேவையை துவங்கிஉள்ளன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், 'பிரதமரின் இ - பஸ்' என்ற பெயரில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும், 169 நகரங்களில், 10,000 இ - பஸ்கள் இயக்க, 20,000 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கான நகரங்கள் தேர்வு பணிகள் முடிந்துள்ளன.
இதுகுறித்து, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:
பிரதமரின் இ - பஸ் திட்டத்தில், தமிழகத்தில், 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வசிக்கும் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதன்படி, முதற்கட்டமாக, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, வேலுார், ஆவடி, அம்பத்துார் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நகரங்களில் இ - பஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு அனுப்ப வேண்டும். இ - பஸ் திட்டத்தில், 10 ஆண்டுகளுக்கான செலவுக்கான நிதியையும், மத்திய அரசே வழங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த முடிவை, தமிழக அரசு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (12)
பேருந்தில் இரட்டை இலையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது? யார் வேலையோ தெரியாது.
சுற்றுச்சூழல் கருதி மத்திய அரசு இயக்கப்போகிற இந்த பேருந்துகள் மக்களிடையே வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை. இந்த பேரூந்துகளுக்காக அடுத்த பத்து வருடங்களுக்கு பராமரிப்பு மற்றும் நிதி & செலவு அனைத்தும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதால் மாநில அரசாங்கம் இந்த திட்டம் சம்பந்தமாக குறை சொல்லாது என்று நம்பலாம். நம் நாட்டில் பொருட்கள் மற்றும் ஆட்களை கையாள்வதில் உள்ள செலவு குறிப்பாக போக்குவரத்துக்கு அதிகமாக உள்ளது. எரிபொருள் செலவு குறைவாக உள்ள வாகனங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் . அதேபோன்று மக்களும் பொதுப்போக்குவரத்துக்கு முக்கியத்துவம் தந்து அதில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இ பஸ் போன்று இ - ஆட்டோ வும் இன்றைய காலத்தில் மிகவும் அவசியம். மத்திய அரசு மானியம் தரும் பட்சத்தில் இ ஆட்டோக்கள் மக்களின் பயன்பாட்டுக்கு உதவலாம். அதிகம் எரிபொருள் செலவை உண்டாக்கும் பேருந்துகளை அரசே கழித்துகட்டவேண்டும். நமது நாட்டின் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைத்தால் அது நாட்டின் அந்நியச்செலாவணியை மிச்சப்படுத்திடலாம்.
ஈ பஸ்ஸு ? முதல நாட்டில் உள்ள ரோடு அதை சரிபண்ண பாருங்க உங்க பஸ் ஒருதடவை அதில் போனால் அப்படியே உக்கார்ந்து விடும் அப்புற ஈ பஸ் மறைத்து போய்விடும்
வந்தே பாரத் ரயிலுக்கே ஸ்டிக்கர் ஒட்டியவனுங்கதான் இந்த திமுக களவானிங்க . இதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவானுங்க
வந்தே பாரத் வுட வாணாம் போ...
பராமரிப்பு நிதிகளை சீக்கிரமா அனுப்பி வைங்க. மந்திரிகளுக்கு செலவுக்கு பணம் வேணும்...