நிஜாமாபாத்: ''தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை தி.மு.க., அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,வை காங்கிரஸ் தட்டிக் கேட்குமா?'' என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நிஜாமாபாதில் நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, காங்கிரஸ் கூறுகிறது. அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், அதிகளவில் உள்ள ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை மாநில அரசு வலுகட்டாயமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
அதுபோல, சிறுபான்மையினருக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் இந்த மாநில அரசுகள் கொண்டு வருமா? நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
தமிழகத்தில் ஹிந்து கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது.
எவ்வளவு மக்கள்தொகையோ அதற்கேற்ற உரிமை என்று கூறும் காங்கிரஸ், தமிழகத்தில் உள்ள தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம், கோவில்களை ஹிந்து மக்களிடம் ஒப்படைக்கும்படி கூறுமா?
சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராதபோது, கோவில்களை மட்டும் எப்படி அரசு எடுத்துக் கொள்ள முடியும்? மக்கள்தொகைக்கு ஏற்ப உரிமை தர வேண்டும் என்று கூறும் காங்கிரஸ், கோவில்களை ஹிந்துக்களிடம் அளித்து, அவர்களுடைய உரிமையை நிலைநாட்டுமா?
பா.ஜ.,வை பொருத்தவரை, ஜாதி, மதம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், ஏழ்மையில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான், இந்த அரசின் நோக்கமாகும். அதை செய்வதையே எங்களுடைய கடமையாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (29)
புதுச்சேரி அரசு ஏன் வக்ப் வாரியத்துடன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தீவிரவாதத்தை கண்காணிக்க
ayya intha vaayla வடை சுடுவது எல்லாம் வேண்டாம் தில் இருந்த தமிழ் நாட்டில் வந்து சொல்லுங்க பார்க்கலாம்
நீ முதலில் தமிழை ஒழுங்காக எழுது பார்க்கலாம்!
ஆண் சாதி, பெண் சாதி - சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா என்று பாரதி சொன்னார். செய்யும் தொழிலுக்கேற்றபடி பெயர் வைத்து சாதி பெயராக மாற்றிவிட்டார்கள். அப்படி பார்த்தல் இன்று பல ஆயிரம் சாதிகள் உருவாகியுள்ளன. அதாவது மத்திய அரசு ஊழியர், மாநில அரசு ஊழியர், வங்கி ஊழியர், எல் ஐ சி ஊழியர், ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் என்று இப்படி எல்லோருக்கும் சாதி அடைமொழி கொடுக்கலாம். ஒரே சாதி இந்திய சாதி, ஒரே மதம் இந்திய மதம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டில் உதவிகள் செய்து நலமாக மகிழ்ச்சியாக வாழ்வோம் இந்த புனித மண்ணில். வாழ்த்துக்கள்.
கோயில்கள் மாநில அரசின் பட்டியலில் இருப்பது கூட தெரியாமல் பதிவுகள்.
It is better to Releive all the Hindu Temples from the Tamil Nadu Atheist Government .....