புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, நியூஸ்கிளிக் இணைய ஊடக நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மிகவும் கடுமையான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டுக்கு எதிராகச் செயல்படுவது, மத ரீதியில் மோதல்களை ஏற்படுத்துவது, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஊடக நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வீடு உட்பட 30 இடங்களில், புதுடில்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்து நீக்கப்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சோதனைகளுக்கு இடையே, அந்த நிறுவனத்தில் பணியாற்றும், ஒன்பது பெண்கள் உட்பட 46 பேரிடம் புதுடில்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து 'நியூஸ்கிளிக்' இணைய ஊடகத்தின் நிறுவனரும், பத்திரிகையாளருமான பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், புதுடில்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும், புதுடில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்துக்கும், போலீசார் 'சீல்' வைத்தனர்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக, நியூஸ்கிளிக் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியரான பிரபிர் புர்கயஸ்தா மீது ஏற்கனவே வழக்கு உள்ளது.
இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரே கூறியுள்ளதாவது:பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பயத்தால், திசை திருப்பும் நோக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஊடக நிறுவனத்தின் மீது சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:இந்த சோதனைகளை நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால், நீங்கள் தவறு செய்தால், விசாரணை அமைப்புகளின் சோதனை நிச்சயம் நடக்கும்.வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணத்தை பெறுவோம்; ஆனால், விசாரிக்கக் கூடாது என்று எந்த சட்டத்திலாவது கூறப்பட்டுள்ளதா? இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை ஆதரிப்பது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு, 'இந்திய பிரஸ் கிளப்' எனப்படும் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த விஷயத்தில் அரசு முழு விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.'எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா' வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போலீசாரின் இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது. இது, ஊடகங்களை கட்டுப்படுத்தும் முயற்சி. ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் முக்கியமானது என்பதை அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜனநாயகத்தின் நான்காவது துாண் பாதுகாக்கப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் பத்திரிகையாளர் சங்கம், மும்பை மற்றும் கேரள பத்திரிகையாளர் சங்கம் ஆகியவையும், பத்திரிகையாளர்கள் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
வாசகர் கருத்து (10 + 5)
செய்தி தவறானது. அறைகுறையாக சொல்லாதீர்கள் நிறுவனம் சீநாவிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பலவருடங்கள் எழுதியதால் தான் கைது. தமிழகத்தில் மட்டும் கைது செய்யலாமா? மத்திய அரசு நடவடிக்கையே எடுக்கக் கூடாதா என்ன? கருத்துரிமைக்கு ஒரு அளவு உண்டு. உலகின் எந்த நாடும் இந்த மாதிரி எழுதினால் பொறுக்க மாட்டார்கள். எனவே இது வரவேற்கத் தக்கது
ஊடக சுதந்திரம் தேசத்திற்கு எதிராக செயல்பட அனுமதிக்கிறதா நம்தேசத்தில் பத்திரிகை நடத்திக்கொண்டு சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியாவின் இறையாண்மையை கெடுக்கவும் இந்த பத்திரிகையாளர்கள் சங்கம் துணைபோகிறது வெட்கக்கேடு தேசதுரோகிகள்
எதையும் செய்ய அனுமதிக்கிறதா சட்டம்?
இந்த நியூஸ் கிளிக் கும்பல் முழுவதும் கைது செய்யப் பட வேண்டும்..
டில்லியில் செய்தி நிறுவனம், பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு (5)
கவர் எவ்வளவு இருக்குன்னு பாருங்க விடாதிங்க.
தேசவிரோதிகளை ராணுவநீதிமன்றத்தில் ஆஜர் செய்து தண்டனை கொடுங்கள்
Good. Good to the nation.
இதில் கவலை என்னவென்றால் வெறும் சோதனையோடு முடிந்து விடும். உண்மைகள் முழுவதும் வெளிவந்து அயோக்கிய ராஸ்கல்களுக்கு தண்டனை என்ற செய்தியை என்றாவது பார்த்ததுண்டா? ஒரே ஒரு கேசில் தண்டனை பெட்ர குற்றவாளியும் இன்று வெளியிலே உலாவிக்கொண்டு பாட்மிண்டன் வெளியாடிக்கொண்டிருக்கிறான்
அருமை. தமிழ் நாட்டிலும் மூத்த பத்திரிகையாளர், செய்தி தொடர்பாளர் என்ற பெயர்களில் டிவி விவாதங்களில் காழ்ப்புணர்ச்சியுடன் அன்றாடம் விஷம் கக்கி கொண்டு இருப்பவர்களையும் கவனிக்க வேண்டும்
சீனாவிலிருந்து இறக்குமதியை குவிப்போம். டீ குடிச்சுட்டு வந்து, கண்ணாடி அறையில் பேசி... ஒண்ணும் பலன் இல்லை.