Load Image
Advertisement

கம்யூ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை

 Controversy due to Communism, celebrity speech    கம்யூ., பிரமுகர் பேச்சால் சர்ச்சை
ADVERTISEMENT


திருவனந்தபுரம் ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு காரணமாகவே, முஸ்லிம்கள் அதிகம் உள்ள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், 'ஹிஜாப்' அணியும் வழக்கத்தை கைவிட்டுள்ளனர்,'' என, அக்கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் அனில் குமார் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத நம்பிக்கை



கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள திருவனந்தபுரத்தில், 'எசென்ஸ் குளோபல்' என்ற கடவுள் மறுப்பு கொள்கை மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் அனில் குமார் பேசுகையில், ''கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் செல்வாக்கு காரணமாக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், 'ஹிஜாப்' எனப்படும், தலையை மறைக்கும் துணியை அணியும் வழக்கத்தை கைவிட்டுள்ளனர்,'' என, பேசினார்.

இந்த கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, 'சமஸ்தா' எனப்படும், சன்னி பிரிவு முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவர் அப்துசமது பூக்கோட்டூர் கூறுகையில், ''மத நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் எதிர்ப்பதே இடதுசாரிகளின் அடிப்படையாக உள்ளது.

''அவர்கள் ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மையினரை அணுகுகின்றனர். அவர்களின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பட்டுள்ளது,'' எனக் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி எப்போதுமே இரண்டு பிரிவுகளை தயாராக வைத்திருக்கும். ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கையை எதிர்த்து பேசுவர்.

உண்மையான முகம்



மற்றொரு பிரிவினர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் கூட்டங்களில் பங்கேற்று அவர்களை புகழ்ந்து பேசுவர்.

கம்யூனிச சித்தாந்தம் பேசுவோர் அப்பாவிகள் என, இனியும் மக்கள் நம்பப் போகின்றனரா?

அனில் குமாரின் பேச்சு, கம்யூனிஸ்ட் கட்சியினரின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

சுதந்திர சிந்தனையை, ஹிஜாப் அணிவதை கைவிடுவதுடன் இணைத்து பேசும் நோக்கம் என்ன?

மலப்புரத்தில் முஸ்லிம் பெண்கள் யாரும் ஹிஜாப் அணிவதை கைவிடவில்லை. இன்றைய தலைமுறையினர் கூட ஹிஜாப் அணிகின்றனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கட்சிக்கும், கருத்துக்கும் தொடர்பில்லை'

மார்க்சிஸ் கம்யூ., கட்சியின் மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் கூறியதாவது:ஆடை தேர்வு என்பது தனிப்பட்ட விருப்பம். நம் அரசியலமைப்பு அளித்துள்ள ஜனநாயக உரிமையின் அங்கம். எனவே, அந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு கூட உரிமை இல்லை. கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான பிரச்னை எழுந்தபோதே, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி தங்கள் தரப்பை தெளிவுபடுத்தி உள்ளது. அனில் குமார் தற்போது பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும், கட்சியின் கொள்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (2)

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு சொரணை இல்லாமல் இருக்க அவர்கள் என்ன ஹிந்துக்களா? அமைதிமார்க்கம் என்பது பெயர் மட்டுமே

  • Narayanasamy - Chennai,இந்தியா

    இது போல இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யாராவது சாடினா இந்துக்களுக்கு ஏன் ரோசம் வரமாட்டேன் என்கிறது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்