ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: நீதித்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது என பேசியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ராஜஸ்தான் காங்., முதல்வர் அசோக் கெலாட் , உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு செய்தார்.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசோக் கெலாட், நீதித்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது. அங்கு பணியாற்றும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து சாதகமான தீர்ப்பு பெறுகின்றனர் என்றார். இவரது பேச்சு மாநிலம் முழுதும் வழக்கறிஞரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.நீதித்துறையின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக பேசிய அசோக் கெலாட் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா, பரவீர் பட்நாயகர் விசாரித்தனர், அப்போது முதல்வர் அசோக் கெலாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், நீதித்துறையை அவமதிக்கும் விதமாக தாம் கருத்து கூறவில்லை. தமக்கு நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் பேசியதில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்நீதிமன்றம் முன்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். மனுவை ஏற்ற நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வாசகர் கருத்து (6)
தமிழக ஊழல் அமைச்சர்களை பாதுக்காக்க யார் உதவுகிறார்கள் என்பது உலகுக்கே தெரியுமே...
மான் வேட்டையாடியவனும் சாலையோரம் தூங்கியவன் மீது காரை ஓட்டி கொன்றவனும் எந்த வேலையும் செய்யாமல் கோடிகளை குவித்தவனும் சுபிட்சமாக வாழ்வது ஒன்றே போதும் நீதித்துறையின் நிலையை எடுத்துரைக்க
Herald கேஸ் மட்டும் மறந்து போகுதா ..
அவர் உண்மைதான் பேசி உள்ளார். நீதி துறை சர்வதிகரமாக செயல் படுகிறது. இந்த துறையில் ஊழல் இல்லை என்று நீதி அரசர்கள் சொல்ல முடியுமா?
Though he apologised it is a commonly known phenomenon that rich and powerful manipulate the justice!! in India Judiciary is out of reach for a common man more so in higher courts..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
குற்றங்கள் அதிகரித்து ஊழல் ஆட்சி தலை விரித்தாடுகிறது என்றால் அரசுகளின் மெத்தனம் நீதி மன்றங்க ளின் மோசமான தீர்ப்புகள் தான் முக்கிய காரணங்கள் ஆகும். தமிழ் நாட்டில் மிகவும் மக்களை பாதித்து இருக்கிறது. Gehlot அவர்கள் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தால் உச்ச நீதிமன்றம் நல்ல நடவடிக்கை எடுக்க நம்பிக்கை மக்களிடையே வரவேண்டும்.