ராமாயணத்தில், ராமர் இலங்கை செல்வதற்காக வானரப் படையினரால் உருவாக்கப்பட்டது, இந்த ராமர் சேது பாலம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்நிலையில், ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கவும், பாலத்தின் இருபுறமும் சுவர் எழுப்பவும் அனுமதி கோரி, 'ஹிந்துதனிநபர் சட்ட வாரியம்' என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரிய பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் மனு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஹிந்து தனிநபர் சட்ட வாரியத்தின் மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை சுப்ரமணியன் சுவாமியின் மனுவுடன் சேர்த்து விசாரிக்க அந்த அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான அசோக் பாண்டே நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இது, அரசின் நிர்வாகம் தொடர்
பானது; நீதிமன்றம் தலையிட முடியாது' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.
வாசகர் கருத்து (3)
Supreme Court refuses to entertain plea seeking direction to 'Ram Sethu' as national monument Modi ji की timing fantastic 😎 Told you Swamy trick for china will not work. so only modiji know about this crook and cunning person swamy and did not entertain his request and did not offer any poistion as Modiji knew that this fellow is dangerous and backstabber
ராமர் சேதுவை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு மோடி ஜியின் நேரம் அருமை 😎 சீனாவுக்கு சுவாமி தந்திரம் பலிக்காது என்று சொன்னார். இந்த மோசடிக்காரன் மற்றும் தந்திரமான ஸ்வாமியைப் பற்றி மோடிஜிக்கு மட்டுமே தெரியும், மேலும் அவரது வேண்டுகோளுக்கு இணங்கவில்லை, மேலும் இந்த நபர் ஆபத்தானவர் மற்றும் முதுகில் குத்துபவர் என்பதை மோடிஜி அறிந்திருப்பதால் எந்த ஒரு பதவியும் கொடுக்கவில்லை.
நினைவுச்சின்னம் ஓக்கே. ஆனால் சுவர் நாட் ஓக்கே.