புதுடில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். டில்லியில் நிர்மல் பவனில் இருந்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் வெளியேறி வாசலில் நின்றனர்.
நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, 4வதாக மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட மாநிலங்களில் நில அதிர்வு
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வானது நேபாள எல்லையில் உள்ள உ.பி., உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.
வீடுகளில் இருந்த மின் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்டவை குலுங்கின. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. நில அதிர்வு காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
வெளியேறிய மத்திய அமைச்சர்
டில்லியில் உள்ள நிர்மல் பவனில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்த போது நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், மத்திய அமைச்சர் உட்பட அதிகாரிகள் அனைவரும் வெளியேறி வாசலில் நின்றனர்.
வாசகர் கருத்து (2)
In india there will be a terrible earthquake will happen unfortunately one day,but no body know when it will happen, because Himalayas move
அங்கங்கே 3000 அடி வரைக்கும் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சுங்க.