ராய்ப்பூர்: மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும். இதனால் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் என சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும். இதனால் நாட்டின் ஒவ்வொரு மூலையும் வளர்ச்சி அடைய வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், உள்கட்டமைப்புக்கான செலவினத்தை, 10 லட்சம் கோடி ரூபாயாக, எங்கள் அரசு உயர்த்தியதற்கு இதுவே காரணம். தேசத்தை தன்னிறைவாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எஃகு ஆலை பஸ்தார் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். புதிய எஃகு ஆலையானது மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மக்கள்தொகைக்கு ஏற்ப சலுகைகள் வழங்க வேண்டும் என்கிறார் ராகுல். சிறுபான்மையின உரிமையை காங்கிரஸ் பறிக்க முயற்சிக்கிறதா?. இன்று தெலுங்கானாவுக்கு 8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பரிசளிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. துவங்கும் திட்டங்களின் பணியை நமது அரசு நிறைவு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.
நீண்ட காலமாக, வசதி படைத்த மக்களுக்கு மட்டுமே மருத்துவம் சிறப்பாக கிடைத்தது.
ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில், அனைவருக்கும் சுகாதாரம் கிடைப்பதையும், மலிவு விலையில் இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் பல முயற்சிகளை எடுத்துள்ளோம்.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜ., 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, சந்திர சேகரராவ் ஆதரவு தேவைப்பட்டது. இந்த தேர்தலுக்கு முன்பு விமான நிலையத்தில் என்னை வரவேற்றார். ஆனால், பின்னர் திடீரென அதை நிறுத்திவிட்டார். டில்லியில் அவர் தே.ஜ.,கூட்டணியில் சேர விரும்புவதாக கூறினார். மேலும் அவருக்கு ஆதரவு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து (11)
இப்போதைக்கு 2047 லன்னு சொல்லி ஓட்டிக்கிட்டிருக்காங்க. அப்புறமா 2100 லன்னு சொல்லிடுவாங்க. எவன் கேள்வி கேக்கப் போறான்?
குடும்பத்துக்கு பதினைந்து லட்சம் என்று புளுகி கொண்டு பாஜாக்கா ஒட்டகம் மூக்கை நுழைத்த போது 2023 க்குள் பாலாறு தேனாறு ஓடும் என்று கதை சொல்லிட்டு வந்துச்சு. புல்லட் டிரெயின் பத்தி என்னாச்சுன்னு கேக்க ஆளில்லை, எத்தனை லட்சம் கோடி ஆட்டையை போட்டார்கள் என்று சிஏஜி அறிக்கை கூட வாயை தொரக்கல்லை. விவசாயி வருமானம் இரட்டிப்பாகும்ன்னு சொன்னவன் எங்கேன்னு தெரியலே. வருசத்துக்கு ரெண்டு கோடி வேலைன்னு ஆரூர் ரங்கு, காசி மாதிரி ஆளுங்க தான் ஜாடா வேலை பாத்துக்கிட்டு இருக்காங்க. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை சொல்ற மாதிரி 1,50,000 பேரு பாஜாகாவின் பல்லாயிரம் வாட்சப் குரூப்பில் முழு நேர வேலையாக பொய்யையும் புளுகையும் பரப்பிக்கிட்டு இருப்பதாக செய்தி. பாஜாகாவின் ஆட்சியில் இந்திய நாட்டின் வருங்காலம் அழிவை நோக்கி போகிறது.
மூலைமுடுக்கெல்லாம் வளர்ச்சி அடையவேண்டும் என்றால்.. முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். அப்போதான் எந்த மூலைமுடுக்கு உடனடியாக சீர்செய்யவேண்டும் .. எந்த மூலைமுடுக்கு பிற்பாடு சரிசெய்யசெண்டும் என்பது தெளிவாக தெரியும் போது தான் நாட்டுல சமூகநீதியும் சமன்ப்படுத்தலும் விரைவாக நடக்கும்.
கோரனா காலத்தில் உலகமே ஒரு ஆண்டு முடங்கி கிடந்த சமயம் இந்தியா அடி பாதாளத்தில் விழாமலும், இன்று முடங்கி கிடந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சி பாதையில் செல்ல எடுத்து வரும் நடவடிக்கையை மனதிற்கு வந்தார் போல் செற்றை வாரி இறைக்க வேண்டாம்.
நாங்க மூலை முடுக்கு எல்லாம் டாஸ்மாக் ஓபன் பண்ணிட்டோம்.... ஓகேவா முட்டுஸ்
மருந்துகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 31 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த ஊழல் அரசு தான் நடந்து கொண்டிருக்கிறது. இரட்டை எஞ்சின் இல்லை, மூணு எஞ்சின் ஊழல் அரசு.