Load Image
Advertisement

"குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க": கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில் முதல்வர் அட்வைஸ்

Suppress criminals with an iron fist : CM stalin advises Collectors, SPs at conference    "குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்க": கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில் முதல்வர் அட்வைஸ்
ADVERTISEMENT
சென்னை: பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.


சென்னையில் நடந்த கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு பேசியதாவது: சாலை விபத்துக்களால் உயிரிழப்பு அதிகரிப்பு. போலீஸ், போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து விபத்து தடுப்புக்கு ஆய்வு செய்ய வேண்டும்.

குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பொய்த்தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும்.

பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதல் இலக்கு. சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது வேதனை அளிக்கிறது.


தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது. சமூக ஊடகங்களை கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை தடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


வாசகர் கருத்து (43)

  • adalarasan - chennai,இந்தியா

    வரவேற்கிறோம் .போலீஸ் தங்கள், கீழ் இருக்கிறது? அவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளிகளை, தண்டிக்க வேண்டும். உண்மை என்ன வென்றால் கடந்த இரண்டு வருடத்தில், குண்டு வெடிப்பு ச, கொலைகள், நடந்தவண்ணம் இருக்கிறது.இதை தடுக்க வேண்டுகிறாம்..

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இது வெளிப்படையான உத்தரவு. கழக உபி க்கள் குற்றம் செய்தால் கண்டுக்காதீங்க என்ற உத்தரவு பின்னாடியே ரகசியமாக வந்திருக்கும்.

  • DVRR - Kolkata,இந்தியா

    ஐய்யோ ஐய்யோ இப்படி தயவு செய்து பேசவேண்டாம் அப்புறம் ஒரு திருட்டு திராவிட மடியல் அரசியல் வியாதி வீதியில் நட்மாட முடியாது.

  • S.kausalya - Chennai,இந்தியா

    ரொம்ப பொங்கதீங்கா. Accused பாதி பேர் நம்ப ஆட்கள்

  • Raa - Chennai,இந்தியா

    அந்த இரும்புக்கரம் கழக நிர்வாகிகளின் காயலான் கடையில் கிடைக்கும் என்பதை....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement