Load Image
Advertisement

கண்டு கொள்ளாத கட்சிகள்: வருத்தத்தில் பா.ம.க.,

Lok Sabha Election 2024: DMK Alliance, ADMK alliance: Ramadoss: Parties that didnt find out: PMK in grief,   கண்டு கொள்ளாத கட்சிகள்: வருத்தத்தில் பா.ம.க.,
ADVERTISEMENT
சென்னை : ஆளுங்கட்சியான தி.மு.க.,வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் கண்டு கொள்ளாமல் இருப்பது, பா.ம.க., தலைவர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.

பா.ஜ., உறவை முறித்துள்ள அ.தி.மு.க., தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருந்த வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவற்றை இழுப்பதற்கான முயற்சிகளை துவக்கிஉள்ளது.

திருமாவளவனை கூட்டணிக்குள் கொண்டு வர காட்டும் ஆர்வத்தை, பா.ம.க.,விடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி காட்டாதது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு பழனிசாமி அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ராமதாஸ் கோரிக்கையை ஏற்று, வன்னியர்களுக்கு, 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை, கடும் எதிர்ப்பையும் மீறி வழங்கினார்.

ஆனால், அ.தி.மு.க., தோற்று, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், உடனே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார் ராமதாஸ். அந்த கோபம் பழனிசாமிக்கு இன்னும் தீரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், கூட்டணி கட்சிகளை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தி.மு.க.,வும், பா.ம.க.,வை கண்டு கொள்ளவில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்புகளும், பா.ம.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருப்பதும், வி.சி., போன்ற கட்சிகளின் எதிர்ப்பும் காரணங்களாக கூறப்படுகின்றன.

தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்களிடம் கூட அ.தி.மு.க., பேச்சு நடத்தி வருகிறது. அதேபோல சிறிய கட்சிகளை விட்டு விடக்கூடாது என, தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. இவ்விரு கட்சிகளும் கணிசமான ஓட்டு வங்கியை பெற்றுள்ள பா.ம.க.,வை கண்டு கொள்ளாமல் இருப்பது, அக்கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


வாசகர் கருத்து (22)

  • Sck -

    அரசியலில் நம்பகத்தன்மை அற்றவர் ராமதாஸ், ஆகையால் பமகவை இனி எந்த கட்சியும் சேர்க்க பலமுறை யோசிக்கும்.

  • Bala - chennai,இந்தியா

    அமலாக்கத்துறையும் வருமான வரித்துரையும் ரைடு விட்டா இந்த பார்ட்டி வழிக்கு தன்னால வரும். இந்த அப்பட்டமான ஜாதி கட்சிக்கு இப்போ மக்களிடம் செல்வாக்கு சுத்தமாக இல்லை

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறிக்கொண்டே இருந்தால் இது தான் நிலை

  • sankar - Nellai,இந்தியா

    இவர்களை மட்டும் அல்ல - அந்த திருமா குரூப்பையும் யாரும் கண்டுகொள்ளக்கூடாது - அதுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும்

  • ஆரூர் ரங் -

    இவங்க கேட்ட பத்தரை சதவீத இடஒதுக்கீடுதானே அதிமுக ஆட்சியை ஒழித்தது? இனிமே இவரு தான் அடுத்த ராசியில்லா🤪 வைகோ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்