Load Image
Advertisement

மானாவாரி கண்மாய்களுக்கு கால்வாய் தேவை.. திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும்

Canals are needed for rainwater ponds.. Is irrigation available?   மானாவாரி கண்மாய்களுக்கு கால்வாய் தேவை..  திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டிக்க வேண்டும்
ADVERTISEMENT
மதுரை : ''குண்டாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலியப்பட்டி, புளியங்குளம், தனக்கன்குளம் மானாவாரி கண்மாய்களுக்கு நடுவில் கால்வாய் வெட்டி முறைப்பாசனமாக்க வேண்டும்'' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கண்மாய்களை தவிர சுற்றியுள்ள பகுதி கண்மாய்களில் வைகையாற்று தண்ணீர் திருமங்கலம் பிரதான கால்வாய், நிலையூர் கால்வாய் வழியாக பாய்கிறது. மாவிலிபட்டி கண்மாய்க்கு திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் கிடைக்கிறது. கண்மாய் நிரம்பி மறுகாலில் தென்பழஞ்சி கண்மாயை அடைகிறது. தனியாக கால்வாய் இல்லை.

இதுபோலவே புளியங்குளம், சாக்கிலியபட்டி, தனக்கன்குளம் வரை அடுத்தடுத்த கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மழை பெய்து ஒரு கண்மாய் நிரம்பினால் மட்டுமே மறு கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கும்.

இதுகுறித்து மாடக்குளம் கண்மாய் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் மாரிச்சாமி கூறியதாவது: திருப்பரங்குன்றம் தாலுகாவில் மாடக்குளம், தென்கால் கண்மாய் பாசனப்பரப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த மானாவாரி கண்மாய்களை நம்பி 1500 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. எனவே மானாவாரி கண்மாய்களுக்கு இடையே கால்வாய் வெட்டி திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டித்து முறைப்பாசன கண்மாயாக மாற்ற வேண்டும், என்றார்.

குண்டாறு செயற்பொறியாளர் கலைச்செல்வியிடம் கேட்டபோது, ‛‛இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது திட்டம் மற்றும் வரைபட பிரிவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

திட்டம் மற்றும் வரைபட பிரிவு செயற்பொறியாளர் ஜோயல் சத்தீஷ் கூறுகையில், ‛‛திட்டத்தை ஆய்வு செய்ய அரசு ரூ.15 லட்சம் ஒதுக்கியுள்ளது. கால்வாய் வெட்டுவது, போர்வெல் ஆய்வு செய்வது, பாலம் கட்டுவது போன்ற விரிவான திட்ட அறிக்கைக்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது கால்வாய் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு குறித்து உடனடியாக தெரியாது'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement