Load Image
Advertisement

நகரில் நிலவும் வாகன நெரிசல் பிரச்னைக்கு... தீர்வு கிடைக்குமா?  போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Will there be a solution to the problem of traffic congestion in the city? Minister consults with police officers   நகரில் நிலவும் வாகன நெரிசல் பிரச்னைக்கு...  தீர்வு கிடைக்குமா?    போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ADVERTISEMENT
புதுச்சேரி நகரம், சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக மாறி வருகிறது. அழகிய கடற்கரை, பாரம்பரிய கட்டடங்கள் அதிகமுள்ள 'ஒயிட் டவுன்', நேர்க்கோடு வரைந்தது போன்று அமைந்துள்ள அழகான வீதிகள் போன்றவை சுற்றுலா பயணிகளை ஈர்த்து, சொர்க்க பூமியாக திகழ்கிறது.

அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பழமையான கோவில்கள் ஆன்மிக பக்தர்கள் விரும்பி செல்லும் இடமாக உள்ளன.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், திப்புராயப்பேட்டை பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட 7 இடங்களில் அமைந்துள்ள கடற்கரை சார்ந்த சுற்றுலா தலங்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கின்றன.

இதன் எதிரொலியாக, வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சனி, ஞாயிறு கிழமைகளுடன் தொடர்ச்சியாக 3, 4 நாட்கள் விடுமுறை வந்து விட்டால் ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் புதுச்சேரிக்கு படையெடுக்கின்றனர்.இதன் காரணமாக, வார இறுதியில் புதுச்சேரி நகரில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து விடுகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமையன்று சுற்றுலா பயணிகள் ஏராளமாக குவிந்தனர்.

அதனால், கடற்கரையை ஒட்டிய ஒயிட் டவுன் பகுதி மட்டுமன்றி, நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியது. பல இடங்களில் நகரக்கூட முடியாமல் வாகனங்கள் பல கி.மீ., துாரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால், உள்ளூர் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.

போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை நிலவுவதால், குறைந்த எண்ணிக்கையிலான போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திணறினர்.

ஒவ்வொரு வாரமும் தொடர்கின்ற போக்குவரத்து பிரச்னை, உள்ளூர் மக்கள் சந்திக்கும் சிரமங்கள் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, போக்குவரத்து எஸ்.பி., மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் உள்ளிட்டோரை அமைச்சர் லட்சுமிநாராயணன் தனது அலுவலகத்துக்கு நேற்று அழைத்து ஆலோசனை நடத்தினார்.

ஒயிட் டவுன் பகுதியில் கணிசமான வாகனங்களை நிறுத்தும் வகையில் 'பார்க்கிங்' வளாகத்திற்கு ஏற்பாடு செய்வது, பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல பேட்டரி வாகனங்களை இயக்குவது, போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை களம் இறக்குவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.ஓரிரு நாட்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் தொடர்பாக கள ஆய்வு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் செயல்வடிவம் பெற உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement