Load Image
Advertisement

வண்டலுாரில் லயன் சபாரி: பார்வையாளர்கள் குஷி

 Visitors to Lion Safari at Vandalur Kushi    வண்டலுாரில் லயன் சபாரி: பார்வையாளர்கள் குஷி
ADVERTISEMENT
தாம்பரம்,- வண்டலுார் உயிரியல் பூங்காவில், கொரோனா நேரத்தில் மூடப்பட்ட, 'லயன் சபாரி' நேற்று மீண்டும் துவங்கப்பட்டது. 'ஏசி' வாகனத்தில் பார்வையாளர்கள் சென்று, காட்டில் உலாவிய சங்கங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆசியாவில் மிகப் பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. 1,500 ஏக்கர் பரப்பளவில், பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகையான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பூங்காவில் பார்வையாளர்களை குஷிப்படுத்தும் நோக்கில், அடர்ந்த காட்டுப் பகுதியில் சிங்கங்களை அருகே சென்று கண்டு ரசிக்கும், லயன் சபாரி பயன்பாட்டில் இருந்தது.

பாதுகாப்பு வசதியுடைய வாகனங்களில் பார்வையாளர்களை அமரவைத்து, லயன் சபாரி இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வர்.

அருகே வரும் சிங்கங்களை பார்வையாளர்கள் பார்த்து ரசித்து, திரும்பும் வழியில், மான் சபாரியையும் கண்டு ரசிப்பர். வண்டலுார் வளாக இந்த காட்டு பயணத்தை ரசிப்பதற்காகவே தனி கூட்டம் வரும்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது, லயன் சபாரி மூடப்பட்டது. பூங்காவை மீண்டும் திறந்தபோது, லயன் சபாரியை மட்டும் திறக்கவில்லை.

அதனால், பார்வையாளர்களின் வசதிக்காக, லயன் சபாரியை மீண்டும் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, 147 ஏக்கர் பரப்பளவில் உள்ள, லயன் சபாரியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள், சில மாதங்களாக நடந்து வந்தன.

அப்பணிகள் முடிந்த நிலையில், வன உயிர் வார விழா நாளான நேற்று, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கு லயன் சபாரியை திறந்து வைத்தார்.

இருக்கைகள் 28 உடைய ஒரு 'ஏசி' வாகனத்தில் பார்வையாளர்களை நேற்று அழைத்துச் சென்ற பூங்கா ஊழியர்கள், மான்கள் உலாவிடம் மற்றும் ஏழு சிங்கங்கள் உலாவுமிடத்தை காண்பித்தனர். இவற்றை பார்த்தும், பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்கு மருத்துவமனையில், புதிய அறுவை சிகிச்சை மையத்தை நேரடியாகவும், முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் பார்வையாளர்களுக்காக கட்டப்பட்ட ஓய்வு இல்லங்களை 'ஆன்லைன்' வாயிலாகவும், அமைச்சர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும், பூங்காவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சரிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து, வன விலங்குகளின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு அறிவியல் ரீதியான தீர்வுகளை வழங்குவதற்காக, உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம், வண்டலுாரில் இயங்கி வருகிறது.

இதில், ஆராய்ச்சியாளர்கள், வன அலுவலர்கள் மற்றும் பட்டய சான்று படிப்பிற்காக இந்நிறுவனத்தில் பயில வருவோர் தங்குவதற்கு வசதியாக, சர்வதேசத் தரத்தில், 7.65 கோடி ரூபாயில், அதிவேக 'வைபை' வசதியுடன் கட்டப்பட்ட இரண்டடுக்கு விடுதியும், நேற்று திறக்கப்பட்டது.


வாசகர் கருத்து (1)

  • jayvee - chennai,இந்தியா

    இதற்கும் பிரீ பாஸ் கொடுப்பார்களா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்