Load Image
Advertisement

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

Medicine Nobel prize 2023 awarded to Katalin Karikó, Drew Weissman for their work in mRNA vaccines மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
ADVERTISEMENT

ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,02) அறிவிக்கப்பட்டது. இதில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள சாகன் பல்கலை பேராசிரியர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையின் பேராசிரியர் ட்ரூ வீய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று (அக்.,2) முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

Latest Tamil News
முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2023ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள சாகன் பல்கலை பேராசிரியர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையின் பேராசிரியர் ட்ரூ வீய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. 'கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்ஏ (mRNA) தடுப்பூசிகளை உருவாக்கியதற்காக' இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • ராமகிருஷ்ணன் -

    எப்ப பார்த்தாலும் அமெரிக்கா மருத்துவர்களுக்கு தான் நோபல் பரிசா. ஏன். குறைந்த நேரத்தில் மிக தரமான கொரோனா மருந்து கண்டுபிடித்து மக்களை காப்பாற்றிய இந்திய மருத்துவ விஞ்ஞானிகளுக்கு கொடுத்து இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement