சேலம்: திமுக கவர்ச்சியாக பேசி பேசி மயக்கி, ஏமாற்றி தான் ஆட்சிக்கு வந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நாம் வெற்றிப்பெற பூத் கமிட்டி பலமாக இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர்களை சந்தித்து அதிமுக.,வின் திட்டங்கள், மக்கள் பெற்ற பயன்களை மக்களிடம் நேரில் சென்று எடுத்து சொல்ல வேண்டும்.
2021ல் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் இடம்பெற்றன. அதில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய் புழுகி கொண்டு வருகிறார். வெறும் 10 சதவீதம் தான் நிறைவேற்றியுள்ளனர். அதனுடைய புள்ளி விவரங்களுடன், இரண்டரை ஆண்டுகால அவலங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
திமுக கவர்ச்சியாக பேசி பேசி மயக்கி, ஏமாற்றி தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத மக்கள்நலத் திட்டங்களையும் செய்துள்ளது. நமது ஆட்சி மாறும்போது 85 சதவீதம் நிறைவடைந்த பணிகளை திமுக அரசு வந்து துவக்கி வைத்து அவர்களே நிறைவேற்றியதாக கூறுகின்றனர்.
தண்ணீர் பிரச்னை
மேட்டூரில் 36 அடி தான் தண்ணீர் உள்ளது. பருவமழை பொய்த்து போய்விட்டது. அணையில் நீர் இருந்தால் தான் குடிநீர் கிடைக்கும். இன்னும் 5 அடிகள் குறைந்தால் குடிநீருக்கு பிரச்னை ஏற்படும். இதுவே 24 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் தூங்கி கொண்டிருக்கிறார்.
தன் மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று குறியாக உள்ளனர். தண்ணீர் பிரச்னை வருவதற்கு முன்பாகவே கூறிவிட்டேன். இனியாவது விழித்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடினம்தான். இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பேசிய பழனிசாமி, ''உங்கள் (கட்சியினர்) விருப்பத்தின்பேரில் தான் பா.ஜ., உடனான கூட்டணியை விட்டு வெளியேறினோம். சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி அதிமுக என்பதை மக்களிடம் எடுத்து சொல்லி ஓட்டு கேட்க வேண்டும்'' என்றார்.
வாசகர் கருத்து (16)
நல்லவனாக வேஷம் போட்டு ஆட்சியைப் பிடித்த கூத்தாடிகள் கட்சி பாரம்பரியம்.
கவர்ச்சியாக பேசித்தானே ஆட்சிக்கு வந்தார்கள். உங்களைப் போல ஊர்ந்து போய் காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெறவில்லையே...
சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி அதிமுக என சொல்கிறார்.சிறுபான்மையினருக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என பட்டியல் கொடுப்பாரா?
எம்ஜீஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் படத்தில் நடித்த கவர்ச்சி அரசியலால் ஆட்சியை பிடித்தவர்கள்
பழனிச்சாமி கூட்டணி பேச, மற்ற கட்சிகளை அரவணைத்து செல்ல தகுதியற்றவர். இவரால் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து அழிந்து விடும். திமுகவின் B டீம்.