"பாஜ., ஆட்சி வந்தால் ராஜஸ்தான் வளர்ச்சி பெறும்": பிரதமர் மோடி உத்தரவாதம்
ஜெய்ப்பூர்: ‛‛பாஜ., ஆட்சிக்கு வந்தால் ராஜஸ்தான் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசை பிரதமர் மோடி கடுமையாக சாடி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் பேரணியாக சென்ற பிரதமர் மோடியை கூடியிருந்த மக்கள் வரவேற்றனர். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழித்துவிட்டது. குற்றப் பட்டியலில் மாநிலம் முதலிடத்தில் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானில் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காகவா மக்கள் ஓட்டளித்தார்கள்? மாநிலத்தை சூறையாடுவதில் ஒரு கல்லை கூட விட்டு வைக்கவில்லை.
கவுன்ட் டவுன்
காங்கிரசின் பிரியாவிடைக்கான கவுன்ட் டவுன் துவங்கி இருப்பதை முதல்வர் அசோக் கெலாட் நன்கு அறிவார். ராஜஸ்தானில் பாஜ., ஆட்சி அமைத்த பிறகு மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படாமல் செயல்படுத்தப்படும். முதல்வர் கெலாட் தனது பதவியை பாதுகாப்பதில் மும்முரமாக இருந்தார். அவரது கட்சி அவரது பதவியை பறிப்பதில் மும்முரமாக இருந்தது. தேர்வு வினாத்தாள் கசிவு அதிகம் நடக்கிறது.
கலவரத்தை நிறுத்துவோம்
பாஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, வினாத்தாள் கசிவு தடுத்து நிறுத்தப்படும் என ராஜஸ்தான் இளைஞர்களுக்கு நான் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். வன்முறையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவோம். கலவரத்தை தடுத்து நிறுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்டு வருவோம். இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்.
பெண்களை அவமதிக்கும் இண்டியா கூட்டணி
இண்டியா கூட்டணி தலைவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவதை தினமும் செய்து வருகின்றனர். அவர்கள் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் குழப்பத்தை பரப்புகின்றனர். உதய்பூர் தையல்காரர் கொலையின் போது காங்கிரஸ் கட்சி என்ன செய்தது?. அவர்கள் ஓட்டு வங்கி அரசியல் செய்தார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ராஜஸ்தானில் 7ஆயிரம் கோடிக்கு புதிய திட்டங்களுக்கு இன்று(அக்.,02) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
காந்திஜெயந்தியை முன்னிட்டு சித்தோர்கரில் மஹாத்மா காந்தி உருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கர் நகரில் உள்ள சன்வாலியா சேத் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து (6)
பா.ஜனதா ஆட்சி இருந்தால் வளர்ச்சி அடையுமா.. அப்படின்னா.. தெலுங்கானா எப்படி முன்னிலைக்கு வந்தது.. தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்எல்லாம் இது வரை முன்னுக்கு வரவே இல்லையா? முன்னுக்கு வந்திருந்தால் கர்நாடகத்தில் ஏன் பா.ஜனதா ஆட்சியை இழந்தது...?
கரெக்ட் காங்கிரஸ் 5ஆண்டுகளில் ராஜஸ்தானை சீரழித்து விட்டது
மணிப்பூர் நம்ம இந்தியாவுல தான் சார் இருக்கு
மணிப்பூர் முதலில் அமைதியை நிலைநாட்டவும் பின் ராஜஸ்தான் வல்லாம்
இப்படித்தான் கார்னாடகாவுல, பெங்களூர்ல பேரணி பேரணியா உட்டு... இவிங்களுக்கு நாலு கார்ப்பரேட்களைன்கொண்டாந்து எறக்கிட்டா நாடே வளர்ந்துரும்னு நினைப்பு. இவர்களோட ஆட்சியில் வெகுசிலர் முன்னேற, பலர் பின் தங்கியிருக்காங்க. இந்தியாவுக்கு தேவை டாப்டவுன் வளர்ச்சி அல்ல. பாட்டம்ஸ் அப் வளர்ச்சி வேணும் வரப்புயர நீர் உயரும்ங்கற அவ்வையார் வாக்கை எடுத்துச் சொல்லுங்கப்பா...