ADVERTISEMENT
லக்னோ: ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியில் இருந்து விலகி இருங்கள் என பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது: ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியில் இருந்து விலகி இருங்கள். அப்படி தூரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க உழைக்கலாம்.
போலி செய்திகள் மற்றும் பிரசாரங்களுக்கு எதிராக கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான சக்திகள் அரசியல் சதியின் ஒரு பகுதியாக இதுபோன்ற பிரசாரங்களை பரப்புவதை இன்னும் நிறுத்தவில்லை. எனவே ஒவ்வொரு மட்டத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (3)
யானை பலம் போய் இப்படி பூனை பலத்திற்க்கு இந்த அம்மா வந்துட்டாங்களே. அதுபோக, இன்டி கூட்டணி என சொல்வதுதான் சரி.
ஒன்று தெரிகிறது மோடி என் INDIA வாய் பார்த்து பயப்படுகிறார் என்று, பாருங்கள் இந்த அம்மனியே அலறுது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
உன்னால் பாஜகவிற்கு எதிராக பேச முடியவில்லை பாவம் அப்படி பேசினால் உன் கடந்த கால ஊழல்களை விசாரிக்க சிபிஐ வரும்