ADVERTISEMENT
ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என். ஐ. ஏ., ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீட்டில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி பயங்கரவாத வழக்குகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதேபோல், சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழக கூலிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஆஜராகி வாதாடிய திருப்பதி வழக்கறிஞர் சைதன்யா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!