Load Image
Advertisement

ஆசிய விளையாட்டு: ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

India 4th place in asian games 2023: 2 Bronze medals for India in roller skating    ஆசிய விளையாட்டு: ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
ADVERTISEMENT
ஹாங்சு: ஆசிய விளையாட்டில் ரோலர் ஸ்கேட்டிங்கில் இன்று(அக்.,02) இந்தியாவுக்கு 2 வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை இந்தியாவுக்கு தங்கம் 13, வெள்ளி 21 வெண்கலம் 21 என மொத்தம் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.


ரோலர் ஸ்கேட்டிங்






ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்கேட்டிங் 3ஆயிரம் மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. சஞ்சனா, கார்த்திகா, ஹிரல், ஆரதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

அதேபோல், ஆண்கள் ஸ்பிட் ஸ்கேட்டிங் 3 ஆயிரம் மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில், ஆனந்த் குமார், ஆர்யன் பால் சிங், ராகுல், விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

பதக்கப் பட்டியல் நிலவரம்




இதுவரை இந்தியாவுக்கு தங்கம் 13, வெள்ளி 21 வெண்கலம் 21 என மொத்தம் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.



தேசிய சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை





ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை வித்யா, இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றார். தகுதிச் சுற்றில் வித்யா 55.42 வினாடிகளில் இலக்கை கடந்து, இந்திய முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement